For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூச்சுத்திணறல் பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

By Maha Lakshmi
|

இன்று ஏராளமானோருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறது. மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பவர்கள் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திப்பதோடு, மூச்சை வெளிவிடும் போது சப்தத்துடன் காற்று வெளியேறும். மூச்சுத்திணறலானது சுவாச மண்டலங்கள் இறுக்கத்துடனோ, அடைப்புடனோ அல்லது அழற்சியுடனோ இருக்கும் போது, ஒருவர் சுவாசிக்கும் போது விசில் அடிப்பது போன்ற சப்தம் வரக்கூடும். சொல்லப்போனால் ஆஸ்துமாவின் அறிகுறிகளுள் ஒன்று தான் மூச்சுத்திணறல்.

மூச்சுத்திணறல் பிரச்சனை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் எந்நேரமும் தங்கள் கையில் இன்ஹேலரை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது நிலைமையே மோசமாகிவிடும். ஆனால் இன்ஹேலர் மூச்சுத்திணறல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் பாதுகாக்கும் என்று கூறிவிட முடியாது. இருப்பினும், மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இந்த வைத்தியங்களைப் பின்பற்றினால், பிற்காலத்தில் மூச்சுத்திணறலுக்கான அறிகுறியே காணாமல் போக வாய்ப்புள்ளது.

must try home remedies for wheezing

இக்கட்டுரையில் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வைத்தியங்களைப் படித்து முயற்சித்து, மூச்சுத்திணறல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் மஞ்சள் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு நல்ல சிகிச்சை அளிக்கும் என்பது தெரியுமா? ஆம், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், மூச்சுத்திணறல் பிரச்சனை குறைவதைக் காணலாம். முக்கியமாக இந்த செயலால் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இருக்கும்.

கற்பூரம் மற்றும் கடுகு

கற்பூரம் மற்றும் கடுகு

கடுகு எண்ணெய் சுவாசக் குழாயில் உள்ள சளியின் பெருக்கத்தை உடைத்து, ஆஸ்துமாவின் அறிகுறியான மூச்சுத்திணறலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதிலும் கடுகு எண்ணெயை பொடி செய்யப்பட்ட கற்பூரத்துடன் சேர்த்துப் பயன்படுத்தும் போது, இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு சில துளிகள் கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஒரு ஜாரில் போட்டு, அதில் கற்பூரத்தை சேர்த்து, அந்த மணத்தை சுவாசிக்க வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சளி கட்டுப்பாட்டில் இருப்பதோடு, சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மூச்சுத்திணறல் வருவது தடுக்கப்படும். 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தடுக்கலாம். முக்கியமாக எலுமிச்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதால் தான் நன்மையைப் பெற முடியும்.

தேன்

தேன்

தேன் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த ஒரு பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உள்ளது. இந்த பண்புகளால் தேன் இருமலுக்கு காரணமான பாக்டீரியாவை நீக்க உதவுகிறது எனலாம். மேலும், தேன் மூச்சுத்திணறலுக்கு காரணமான அழற்சியையும் தடுப்பதில் வல்லது. தேன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். வேண்டுமானால், தேனை ஒரு ஜாரில் விட்டு, அதன் மணத்தை சுவாசிக்கலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டு பல்வேறு நோய்களான ஆஸ்துமா மூச்சுத்திணறல் மற்றும் பாக்டீரியல் தொற்றுக்களான சளி, இருமல் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. எனவே மூச்சுத்திணறல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள், 3-4 பற்கள் பூண்டு சாப்பிடுவதன் மூலம், ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கலாம். வேண்டுமானால், பூண்டு கேப்ஸ்யூல் கூட எடுக்கலாம். ஆனால் அதனால் நற்பதமான பூண்டிற்கு இணையான பலனைப் பெற முடியுமா என்பது சந்தேகமே.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம். ஆளி விதை எண்ணெயை ஒருவர் உட்கொண்டால், அது ஆஸ்துமா பிரச்சனையின் அறிகுறியைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ச்சியாக ஆளி விதையை உட்கொண்டு வந்ததில், அதன் தீவிரம் குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தால், 1 டீஸ்பூன் ஆளி விதை எண்ணெயை தினமும் உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் ஆளி விதையை வாயில் போட்டு தினமும் மென்று சாப்பிடலாம்.

ஜின்கோ பிலோபா

ஜின்கோ பிலோபா

ஜின்கோ பிலோபா என்னும் மூலிகை பல நூற்றாண்டுகளாக மூச்சுத்திணறல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த மூலிகை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. இந்த மூலிகையை கொதிக்கும் நீரில் போட்டு டீ போன்று தயாரித்துக் குடிக்கலாம். இல்லாவிட்டால், இந்த மூலிகை மாத்திரை வடிவில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதைக் கூட வாங்கி சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Must-Try Home Remedies For Wheezing

Here are some easy home remedies for wheezing. Read on to know more...
Story first published: Thursday, September 6, 2018, 17:36 [IST]
Desktop Bottom Promotion