For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த 7 உணவுகள் உங்கள் சருமத்தில் குணப்படுத்தமுடியாத சரும நோயை உண்டாக்கும்

நாம் அன்றாடம் பார்க்கும் பெரும்பாலான நபர்களுக்கு முகத்தில் சிவப்பு வண்ணத்தில் கொப்புளங்களோ அல்லது தடிப்புகளோ இருக்கும். இந்த சரும நோய்க்கு பெயர் ரோஸாசியா ஆகும்.

|

அனைவருக்குமே தங்கள் முகத்தை அழகாகவும், எந்தவித கொப்புளங்களும், தழும்புகளும் இல்லமால் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால் இதற்கு இடையூறாக இருப்பதே அவர்களின் உணவுமுறைதான் என பலரும் அறிவதில்லை. நாம் அன்றாடம் பார்க்கும் பெரும்பாலான நபர்களுக்கு முகத்தில் சிவப்பு வண்ணத்தில் கொப்புளங்களோ அல்லது தடிப்புகளோ இருக்கும். முகம் மட்டுமில்லாது இந்த பாதிப்புகள் உடல் முழுவதுமே இருக்கும்.

foods which induce Rosacea

இந்த சரும நோய்க்கு பெயர் ரோஸாசியா ஆகும். நீங்கள் பார்க்கும் பாத்து நபர்களில் மூன்று நபர்களுக்காகவாது இந்த பாதிப்பு இருக்கும். இதற்கு காரணம் அவர்களின் சீரற்ற உணவுப்பழக்கம்தான். ஆண்களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் அதனை வடுக்கள் எப்பொழுதும் போகாது. இந்த பதிவில் நீங்கள் அடிக்கடி சாப்பிடும் எந்த இனவுகளை இந்த பாதிப்பை தூண்டுகிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

நாள்பட்ட சரும நோய் என்பது மெதுவாக வளரும் பருவம், சிவப்பாக மாறுதல், முகப்பருக்கள், கொப்புளங்கள் என பலவகைப்படுகிறது. ஆய்வுகளின் படி ஹிஸ்டமைன் அதிகம் இருக்கும் பொருட்களான சிட்ரஸ் பழங்கள், விதைகள், ஷெல்மீன்கள் போன்ற உணவுகளால் இது ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கூறப்படுகிறது. மேலும் அதிகளவு ஹிஸ்டமைன் உங்கள் இரத்த ஓட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சாக்லேட்

சாக்லேட்

ரோஸாசியா நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒருவருக்கு அந்த ரோஸாசியா பாதிப்பு ஏற்பட காரணமாக இருப்பது சாக்லேட் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கோகோவில் இருக்கும் தெர்போமைன் ஆனது ஆல்கலைடு உணவுகளில் முக்கியமானது. இது இரத்த ஓட்டத்தை அளவுக்கதிகமாக அதிகரித்து சருமத்தை வெளிப்புறம் நோக்கி தள்ளுகிறது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

பொதுவாக ரோஸாசியா பாதிப்பை அதிகமாக தூண்டும் ஒரு பொருள் என்றால் அது ஆல்கஹால்தான். இது ரோஸாசியாவால் பாதிக்கப்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதாகும். குறிப்பாக ரெட் வைன் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆல்கஹால்தான் சருமத்தில் ஏற்படும் வசோடிலேஷன்க்கு காரணம் ஆகும். அப்படியெனில் இது சருமத்தின் வழியாக இரத்த ஓட்டத்தை அதிகரித்து தோலை சிவப்பாக காட்சியளிக்க வைக்கும்.

கார உணவுகள்

கார உணவுகள்

கார உணவுகள் குறிப்பாக மிளகு, மிளகாய், சாஸ் வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது ரோஸாசியா நோய் பாதிப்பை தூண்டும். ரோஸாசியா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதத்தினர் அதிக காரமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கார உணவுகள் குடல் மற்றும் இரைப்பையில் ஏற்படுத்தும் பாதிப்புகளே இதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

MOST READ: மனிதன் இறக்கும்போது வலிக்குமா?... இன்னும் பல மர்மங்களுக்கு விடை இதோ...

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் ரோஸாசியா ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகும், இருந்தாலும் இதனால் சருமத்தில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ரோஸாசியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் இறைச்சியால்தான் தனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். இதற்கு காரணம் இதில் அதிகமாக உள்ள சல்பைட் ஆகும். இது உங்கள் சருமத்தில் நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சூடான பானங்கள்

சூடான பானங்கள்

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீத்தினருக்கு அதிக சூடாக காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்ததால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதிக சூடாக குடிக்கும்போது அது இரைப்பை மற்றும் குடலில் வீக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.இதனால் சருமத்தில் ரோஸாசியா பாதிப்புகளை தூண்டுகிறது. குறைவான சூட்டில் பானங்களை குடிப்பது ரோஸாசியா விரிவடைவதை தடுக்கும்.

புளிப்பு உணவுகள்

புளிப்பு உணவுகள்

சில பானங்கள் மற்றும் உணவுகள் ரோஸாசியா வகை பாதிப்புகளை தூண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக புளிப்பு சுவை கொண்ட உணவுகளான புளி, எலுமிச்சை, நாள்பட்ட பன்னீர் போன்றவை ரோஸாசியாவை தூண்டும் முக்கியமான உணவுகளாகும்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

சில உணவு பொருட்கள் எப்படி ரோஸாசியா நோயை தூண்டுகிறதோ அதேபோல சில உணவுகளே அதன் பாதிப்பை குறைப்பதோடு மேலும் விரிவிடையாமல் தடுக்க உதவும். குறிப்பாக மஞ்சள், வெந்தயம், கேரட், அஸ்வகந்தா, தேன் போன்றவை ரோஸாசியா பாதிப்பிற்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவை. இவை மட்டுமின்றி சில மருந்துகள் மூலமும் இதன் பாதிப்பை குறைக்கலாம்.

MOST READ: வாழ்க்கையில் சீக்கிரமாக பணக்காரனாக இராவணன் கூறும் இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

list of foods which induce Rosacea

Rosacea is a medical condition of the skin that affects people across the globe. There is still no permanent solution to this. Check out the list of foods which induce Rosacea.
Desktop Bottom Promotion