For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று தெரியுமா?

|

மனிதனின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்று சிறுநீர் கழிப்பது. ஆனால் நம்மில் பலரும் சிறுநீர் கழிப்பது பற்றி அதிகம் யோசிக்கமாட்டோம். ஆனால் மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.

How to Increase Your Urine Output

ஒருவரது உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டால், உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே ஒருவர் அன்றாடம் போதுமான அளவு சிறுநீரைக் கழிப்பது என்பது அவசியமாகும். ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சிலர்6-7 முறை கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம்.

இது அனைத்தும் அவர்கள் எவ்வளவு தண்ணீர் அல்லது பானங்களைக் குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இந்நிலையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஒரு நாளைக்கு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மிலி சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும். ஆனால் யாருக்கு 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ, அவர்களது உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Increase Your Urine Output

What is normal urinary frequency and how to increase your urine output? Read on to know more...
Story first published: Thursday, April 5, 2018, 16:06 [IST]
Desktop Bottom Promotion