உடலில் உள்ள அதிகளவு அமிலத்தை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து சற்றும் நினைக்கமாட்டோம். ஆனால் அதுக்குறித்தும் ஒவ்வொருவரும் சற்று சிந்திக்க வேண்டும். முறையான மற்றும் சமநிலையிலான pH அளவு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. நோய்கள் மற்றும் குறைபாடுகள், சமநிலையான pH அளவுள்ள உடலை அண்டாது.

pH அளவானது 0 முதல் 14 வரை அளவிடப்படுகிறது. குறைவான அளவிலான pH அளவு என்றால், உடலில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது என்று அர்த்தம். அதுவே pH அளவு அதிகமாக இருந்தால், அது உடலில் காரத்தன்மை அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

Home Remedies to Fix an Acidic Body

பெரும்பாலானோரது உடலில் அமில காரத்தன்மையில் உள்ள ஏற்றத்தாழ்வினால் தான் உடலில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. அதில் அமில காரத்தன்மையில் ஏற்றத்தாழ்வு இருந்தால், அது அலர்ஜி, ஆஸ்துமா, நெஞ்சு சளி, களைப்பு, அடிக்கடி சளி, தலைவலி, உட்காயங்கள், மூட்டு மற்றும் தசை வலி, சரும பிரச்சனைகள், அல்சர் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஒருவரது pH அளவில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதற்கு மது அருந்துவது, போதைப் பொருட்களை உபயோகிப்பது, அதிகளவு ஆன்டி-பயாடிக்ஸ் எடுப்பது, மோசமான உணவுப் பழக்கம், நாள்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, மாசு நிறைந்த சுற்றுசூழலில் வசிப்பது, வீட்டு பொருட்களில் இருந்து வெளிவரும் கதிரியக்கம் போன்றவைகள் தான் காரணம்.

ஒருவரது உடலில் pH அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை எளிதில் சரிசெய்ய முடியும். அதுவும் ஒருவரது உடலில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால், ஒருசில எளிய வழிகளின் மூலம் சரிசெய்யலாம். கீழே அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

* 1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் சிறிது சுவைக்காக தேன் சேர்த்து கலந்து குடித்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

* இந்த பானத்தை தினமும் 1-2 டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள அமிலத்தன்மை குறையும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

* 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டம்ளர் நீர் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும்.

* இப்படி தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடிக்க வேண்டும்.

குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பேக்கிங் சோடா கலந்த பானத்தை மருத்துவரின் அனுமதியின்றி குடிக்காதீர்கள்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

* ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாதியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பிழித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், உடல் சுத்தமாவதோடு, அமிலத்தன்மையின் அளவும் குறையும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக பச்சையான கீரை காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. இதனால் உடலில் உள்ள அமிலத்தன்மையை சமநிலையாக வைத்துக் கொள்ளலாம். பச்சை காய்கறிகள் பெரும்பாலும் காரத்தன்மை கொண்டவை. அதிலும் இவற்றை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம். அதுவும் கேல், ப்ராக்கோலி, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கொலார்டு, லெட்யூஸ், செலரி மற்றும் அஸ்பாரகஸ் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பழங்களுள் தர்பூசணி, முலாம் பழம், அத்திப் பழம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

அசிட்டிக் டயட்டைத் தவிர்க்கவும்

அசிட்டிக் டயட்டைத் தவிர்க்கவும்

அசிட்டிக் உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதில் ஆல்கஹால், காபி, சோடா, எனர்ஜி பானங்கள், மைதா, மாட்டிறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆர்கானிக் உணவுகள்

ஆர்கானிக் உணவுகள்

ஆர்கானிக் உணவுகள் சற்று விலை அதிகமானவை போன்று தான் இருக்கும். ஆனால் இந்த உணவுகளில் பூச்சிக் கொல்லிகள், கெமிக்கல்கள் போன்ற எதுவும் இருக்காது. மேலும் இயற்கை உரம் பயன்படுத்தியும் வளர்க்கப்படும். இதனால் உடலில் அமிலத்தன்மையின் அளவுக் குறையும். முடிந்த அளவு வீட்டிலேயே சிறு தோட்டம் போன்று அமைத்து, உங்களுக்கு வேண்டிய காய்கறிகளை வளர்த்து வாருங்கள். இது மிகச்சிறந்த பொழுது போக்கு போன்று இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

நீர்ச்சத்தை அதிகரிக்கவும்

நீர்ச்சத்தை அதிகரிக்கவும்

உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருந்தால், உடலில் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்பே இல்லை. எனவே தினமும் போதுமான அளவு நீரைக் குடியுங்கள். இதனால் அமிலத்தன்மை குறைவதோடு, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, டாக்ஸின்களும், இதர கழிவுப் பொருட்களும் உடலில் இருந்து வெளியேற்றப்படும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகளவு நீரைக் குடிக்காதீர்கள். சீரான இடைவெளியில் நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதோடு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளான தர்பூசணி, வெள்ளரிக்காய், செலரி போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.

விரதம் இருங்கள்

விரதம் இருங்கள்

ஒருவரது உடலில் அமிலத்தன்மையை சமநிலையில் பராமரிக்க அடிக்கடி விரதம் இருங்கள். அதுவும் வாரத்திற்கு 5 நாட்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால் மற்ற 2 நாட்கள் விரதம் இருங்கள். இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடல் எடையும் குறைந்து, பல்வேறு தீவிரமான நோய்களின் தாக்குதலில் இருந்து விடுபட்டு, நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

உணவுகளை முறையாக மென்று விழுங்கவும்

உணவுகளை முறையாக மென்று விழுங்கவும்

இது ஒரு நிவாரணி அல்ல. இருப்பினும் உண்ணும் உணவுகளை சரியாக மென்று விழுங்குவதன் மூலம் உடலில் அமிலத்தன்மையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். எப்படியெனில் உணவை சரியாக மென்று விழுங்கு போது, வயிற்றில் உள்ள அமில அளவை சரிசெய்யும் மற்றும் வயிற்றில் pH அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies to Fix an Acidic Body

Here are the top home remedies to fix an acidic body. Read on to know more...
Story first published: Tuesday, March 27, 2018, 17:34 [IST]