For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்

டிஸ்லெக்ஸியா என்பது கற்றல் தொடர்பாக ஏற்படும் ஒரு நோயாகும். இதனால் பேசும் ஒலிகளை அடையாளம் காணுவதில் சிக்கல், உச்சரிப்பு சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

|

குழந்தைளுக்கு பெரும்பாலும் சிறுவயதிலேயே ஏற்படும் மூளை தொடர்பான கோளாறு என்றால் அது ஆட்டிசம்தான். ஆனால் இப்பொழுது குழந்தைகளுக்கு கற்றல் தொடர்பாக அதிகமாக ஏற்படும் மற்றொரு கோளாறு என்றால் அது டிஸ்லெக்ஸியா. இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் தாக்கக்கூடிய ஒரு நோயாகும்.

causes and symptoms of dyslexia

டிஸ்லெக்ஸியா என்பது கற்றல் தொடர்பாக ஏற்படும் ஒரு நோயாகும். இதனால் பேசும் ஒலிகளை அடையாளம் காணுவதில் சிக்கல், உச்சரிப்பு சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை வாசிப்பு இயலாமை என்றும் கூறலாம். டிஸ்லெக்ஸியா மூளையில் உள்ள மொழிகளை புரிந்துகொள்ளும் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டிஸ்லெக்ஸியா நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும் வரை அவர்களுக்கு டிஸ்லெக்ஸியா இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிவது கடினமான ஒன்றாகும். ஆனால் சில அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருக்கிறதா என்பதை கண்டறியலாம். உங்கள் குழந்தையின் ஆசிரியர்தான் இதனை முதலில் கண்டறிய அதிக வாய்ப்புள்ளவர்கள். குழந்தைகளின் மூளையின் செயல்திறனை பொறுத்து நோயின் தீவிரத்தன்மை மாறுபடும்.

பள்ளி செல்வதற்கு முந்தைய அறிகுறிகள்

பள்ளி செல்வதற்கு முந்தைய அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தை பள்ளி செல்ல தொடங்குவதற்கு முன்பே தோன்றிவிடும். குழந்தைகள் தாமதகமாக பேச தொடங்குவது, புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள், வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது, பெயர், நிறம் மற்றும் எழுத்துக்களை நியாபகத்தில் வைத்துக்கொள்ள சிரமப்படுவது, ரைம்ஸ் கற்றுக்கொள்ளவும், பாடவும் சிரமப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருக்க அதிக வாய்ப்புள்ளது.

பள்ளி செல்லும் வயதில் அறிகுறிகள்

பள்ளி செல்லும் வயதில் அறிகுறிகள்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதன் அறிகுறிகள் அதிகமாகவே இருக்கும். அவர்கள் வயதிற்கு ஏற்ற வேகம் இல்லாமல் மெதுவாக வாசிப்பது, கேட்கும் வார்த்தைகள் புரியாமல் இருப்பது, வாக்கியங்களை கட்டமைக்க சரியான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது, வார்த்தைகளுக்கு இடையே வித்தியாசம் காணமுடியாமல் தவிப்பது, எழுத்துக்கூட்டி படிப்பதில் சிரமம், படிப்பது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது போன்றவை உங்களை குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான அறிகுறிகள்

இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான அறிகுறிகள்

டிஸ்லெக்ஸியா பெரியவர்ளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். படிப்பதில் சிரமம், வாசிக்கும்போது எழுத்துப்பிழைகள், வாசிப்பதில் இருந்து விலகி இருப்பது, வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது, மற்றவர்கள் கூறுவது தாமதமாக புரிவது, மனப்பாடம் செய்வதில் சிக்கல், கணக்கு தொடர்பான பிரச்சினைகள், புதிய மொழியை கற்றுக்கொள்வதில் சிக்கல் என கற்றல் தொடர்பான பல அறிகுறிகள் டிஸ்லெக்ஸியா இருப்பதை உறுதிசெய்யக்கூடும்.

MOST READ:பெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத ஆச்சரியமான தகவல்கள்

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

ஆரம்ப பள்ளி நிலைகளிலேயே குழந்தைகள் சிலவற்றை நன்கு கற்றுக்கொள்வார்கள். ஆனால் உங்கள் குழந்தைகளால் அது முடியவில்லை என்றால் அவர்களுக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து செல்லுங்கள். அவர்களின் கற்றல் திறனை சோதித்து அதற்கான சிகிச்சைகளை அளியுங்கள். சிறுவயதிலேயே டிஸ்லெக்ஸியாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அதுவே அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.

காரணங்கள்

காரணங்கள்

டிஸ்லெக்ஸியா ஏற்பட முக்கிய காரணம் மரபணு கோளாறுகள்தான். இந்த் நோய் குழந்தைகளுக்கு பெரும்பாலும் டிஎன்ஏ மூலமே ஏற்படுகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் அம்மாக்கள் போதுமான அளவு சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ளாதது, குழந்தையின் மூளையை பாதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்.

மற்ற காரணங்கள்

மற்ற காரணங்கள்

குடும்பத்தில் யாருக்காவது டிஸ்லெக்ஸியா இருந்தால், குறிப்பிரசவத்தில் பிறந்திருந்தால், கர்ப்பகாலத்தில் புகையிலை, நிகோடின், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது மற்றும் இயற்கையாகவே ஏற்படும் குழந்தையின் மூளை பாதிப்புகள் போன்றவற்றால் டிஸ்லெக்ஸியா ஏற்படலாம்.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் படிப்பில் மந்தமாக இருப்பார்கள். நமது கல்வி முறை என்பது வாசிப்பதை அடிப்படையாக கொண்டது. அப்படி இருக்கையில் இந்த கற்றல் குறைபாடு அவர்களின் கல்வியை முற்றிலும் பாதிக்கக்கூடியது.

MOST READ:இத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க..

சமூகம் தொடர்பான பிரச்சினைகள்

சமூகம் தொடர்பான பிரச்சினைகள்

டிஸ்லெக்ஸியாவிற்கு சிகிச்சை அளிக்கவில்லை எனில் அது குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும் மேலும் பழகுதல் தொடர்பான பிரச்சினைகள், பதட்டம், தனிமை மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஹைபர்ஆக்டிவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

causes and symptoms of dyslexia

Dyslexia is a learning disorder that involves difficulty reading due to problems identifying speech sounds and learning how they relate to letters and words.
Desktop Bottom Promotion