ஹைப்போ தைராய்டு இருக்கா? அதை சரிசெய்வதற்கான சில இயற்கை வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தைராய்டு என்பது கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய முக்கியமான சுரப்பியாகும். இந்த சுரப்பியில் இருந்து வெளிவரும் ஹார்மோன்கள், உடல் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க உதவுகிறது. இந்த சுரப்பியில் இரு வகையான பிரச்சனைகள் வரும். அவை ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு ஆகும்.

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன்கள் குறைவாக சுரப்பதைக் குறிக்கும். ஹைப்பர் தைராய்டு என்பது ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதைக் குறிக்கும். இப்போது நாம் பார்க்கப் போவது, ஹைப்போ தைராய்டு பிரச்சனையைக் குறித்தும், இயற்கையாக அதை சரிசெய்வது குறித்தும் தான்.

Best Natural Treatments For Hypothyroidism

ஒருவருக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். அதில் மலச்சிக்கல், களைப்பு, மன இறுக்கம், சரும வறட்சி, உடல் பருமன், குறைவாக வியர்ப்பது, உயர் இரத்த அழுத்தம், மெதுவான இதயத் துடிப்பு, மெல்லிய மற்றும் வறட்சியான தலைமுடி, கருவள பிரச்சனைகள், தசை வலி, வீங்கிய முகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருவருக்கு ஹைப்போ தைராய்டு பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பொதுவானவை அயோடின் குறைபாடு, ஹைப்போதலாமஸ் கோளாறு, கர்ப்பம், நாளமில்லா சுரப்பியில் பிரச்சனை போன்றவைகளாகும்.

இங்கு ஹைப்போ தைராய்டு பிரச்சனையை சரிசெய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ரோஸ்மேரி ஆயில்

ரோஸ்மேரி ஆயில்

சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை நீர் நிரப்பிய குளியல் டப்பில் சேர்த்து கலந்து, அதனுள் 15-20 நிமிடம் உட்கார வேண்டும். அதேப் போல் ஹைப்போ தைராய்டிசத்தால் உதிரும் தலைமுடியைக் குறைக்க ரோஸ்மேரி எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யலாம். இப்படி தினமும் செய்து வந்தால் விரைவில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

தினமும் 500 மிகி அஸ்வகந்தா கேப்ஸ்யூவை தினமும் உட்கொண்டு வாருங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 1-2 முறை சாப்பிடுங்கள். இதனால் அஸ்வகந்தா தைராய்மு ஹார்மோன்களின் குறைபாட்டை சரிசெய்யும். மேலும் அஸ்வகந்தா ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மற்றும் ஸ்டாமினாவை மேம்படுத்த உதவும்.

அயோடின்

அயோடின்

10-12 மிகி அயோடின் சப்ளிமெண்ட்டுக்களை தினமும் உட்கொள்ள வேண்டும். இப்படி 6 மாதம் முதல் 1 வருடம் வரை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அயோடின் குறைபாட்டினால் ஏற்பட்ட ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இருப்பினும் இம்மாத்திரையை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆளி விதை

ஆளி விதை

1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு டம்ளர் பால் அல்லது பழச்சாறுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவும். மேலும் இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12, ஹைப்போ தைராய்டு பிரச்சனையின் அறிகுறியை எதிர்க்கும்.

முக்கியமாக ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூனுக்கு மேல் ஆளி விதையை சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், எதிர்மறை விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக்கூடாது. இதனால் அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். முக்கியமாக தேங்காய் எண்ணெய் ஹைப்போ தைராய்டு பிரச்சனையால் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும்.

இஞ்சி

இஞ்சி

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி கொதி வந்ததும், 1 இன்ச் இஞ்சியைத் தட்டிப் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர்ந்த பின் தேன் சேர்த்து கலந்து குடியுங்கள். வேண்டுமானால் அன்றாட சமையலிலும் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இப்படி இஞ்சி டீயை தினமும் 3 முறை குடிக்கவும்.

இதனால் இஞ்சியில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், பாலிபீனாலான ஜின்ஜெரால், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்ற மருத்துவ குணங்கள், ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளித்து நிவாரணம் அளிக்கும்.

கெல்ப்

கெல்ப்

கெல்ப் என்பது ஒரு வகை கடற்பாசி. 150-175 மைக்ரோகிராம் கெல்ப் சப்ளிமெண்ட்டுகளை தினமும் ஒன்று என தொடர்ந்து சில வாரங்கள் அல்லது மாதங்கள் உட்கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள அயோடின், தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்ட உதவி, ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள்

குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள்

ஹைப்போ தைராய்டு ஒருவருக்கு குறிப்பிட்ட வைட்டமின்களான வைட்டமின் பி12 குறைபாட்டினாலும் வரும். வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை தொடர்ச்சியாக உட்கொள்வதன் மூலம், ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கலாம். வைட்டமின் பி12 தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைத் தூண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ஹைப்போ தைராய்டிசத்தை மோசமாக்கும் மன அழுத்தத்தை எதிர்க்க உதவும்.

இந்த வைட்டமின்களின் அளவை ஒருவரது உடலில் உணவுகளின் மூலம் எளிதில் அதிகரிக்கலாம். அதற்கு சிட்ரஸ் பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், மீன், இறைச்சி, முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

கருப்பு வால்நட்ஸ் ஓடு

கருப்பு வால்நட்ஸ் ஓடு

ஒரு டம்ளர் நீரில் 2-3 துளிகள் கருப்பு வால்நட்ஸ் ஓட்டின் சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என நல்ல மாற்றம் தெரியும் வரை பின்பற்றுங்கள். பழங்காலத்தில் ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க கருப்பு வால்நட்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான அயோடின், செலினியம், மக்னீசியம், பி வைட்டமின்கள், வைட்டமின் சி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஹைப்போ தைராய்டு பிரச்சனையையும் எதிர்த்து சரிசெய்ய உதவும்.

நெட்டில் டீ

நெட்டில் டீ

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி, 2 டீஸ்பூன் உலர்ந்த நெட்டில் இலைகளைப் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சற்று குளிர வைக்க வேண்டும். பின் அதில் தேன் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இந்த டீயை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Natural Treatments For Hypothyroidism

When your body is unable to produce enough thyroid hormones, it leads to hypothyroidism. Here are some best natural treatments for hypothyroidism. Read on to know more...
Story first published: Tuesday, March 20, 2018, 15:15 [IST]