கடுகு எண்ணெயை அன்றாட சமையலில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

உங்கள் வீட்டு சமையலறையில் இந்த கடுகு எண்ணெய்யை பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த கடுகு எண்ணெய் கடுகு தாவரத்தின் விதைகளிலிருந்து பெறப்படுகிறது. ப்ராஸ்ஸிகா ஜெனிசியா என்பது தான் இதன் அறிவியல் பெயர்.

இது சமைப்பதற்கு மட்டுமில்லாமல் கடவுள் வழிபாட்டுக்கும் பயன்படும் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. சனீஸ்வர பகவானுக்கு இதைக் கொண்டு தான் அபிஷேகம் செய்வார்கள். அந்த அளவுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும், அழகு குறிப்புகளிலும் இது பயன்படுகிறது. நிறைய வீடுகளில் தங்கள் உணவிலும் இந்த எண்ணெய்யை சேர்த்து பலன் பெறுகின்றனர்.

அப்படிப்பட்ட ஏராளமான நன்மைகள் அடங்கிய இந்த கடுகு எண்ணெய்யின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்கள் வராமல் தடுத்தல்

இதய நோய்கள் வராமல் தடுத்தல்

கடுகு எண்ணெய்யில் நல்ல கொலஸ்ட்ரால்கள் அதிகமாக உள்ளது. மேனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. எனவே இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நம் உடலில் நல்ல கொழுப்புகளை கூட்டுகிறது. மேலும் இதில் உள்ள ஓமேகா 3 மற்றும் ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே இதை உங்கள் சமையலில் சேர்த்து கொண்டால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் கூட தெரிவிக்கின்றன.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது

புற்றுநோய் வராமல் தடுக்கிறது

கடுகு எண்ணெய்யில் புற்றுநோயைத் தடுக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வயிறு மற்றும் குடல் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த எண்ணெய்யில் உள்ள குளுக்கோஷினோலேட் தான்.

வலியை குறைக்கிறது

வலியை குறைக்கிறது

கடுகு எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வாத நோய் மற்றும் ஆர்த்ரிடீஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

பல் சொத்தை மற்றும் பற்களின் வலிமைக்கு இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது. வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. மேலும் பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை நீக்குகிறது. இது ஒரு இயற்கையான வொயிட்னர் மாதிரி செயல்பட்டு பற்களை வெண்மையாக்குவதோடு, பல் வலி மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.

சளி மற்றும் இருமல் நீங்க

சளி மற்றும் இருமல் நீங்க

இந்த எண்ணெய் நமக்கு அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இது உடல் சூட்டை ஏற்றி சளியை இளகச் செய்து சுவாசப் பாதை வழியாக எளிதாக வெளியேற்றி விடுகிறது. இதிலுள்ள பொருட்கள் சளி, இருமல் மற்றும் நோய்த்தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிற்கும் மருந்தாக செயல்படுகிறது. மேலும் இந்த ஆயில் நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பியை அதிகரித்து காய்ச்சலால் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையை குறைத்து காய்ச்சலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது.

ஆரோக்கியமான சருமம் கிடைக்க

ஆரோக்கியமான சருமம் கிடைக்க

கடுகு எண்ணெய்யை கொண்டு பொதுவாக குழந்தைகளுக்கு மசாஜ் செய்வர். இது நமது எலும்பு மற்றும் தசைகளை வலுவாக்க பயன்படுகிறது. மேலும் இது நமது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதை வைத்து நமது சருமத்தை மசாஜ் செய்யும் போது சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்கிறது. உடல் சூட்டை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் போன்றவை சரும தொற்று மற்றும் சரும வடுக்களை சரிசெய்கிறது.

ஆரோக்கியமான கூந்தல் கிடைக்க

ஆரோக்கியமான கூந்தல் கிடைக்க

கடுகு எண்ணெய்யில் உள்ள பீட்டா கரோட்டீன் தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. தலையை ஆரோக்கியமாக எந்த வித தொற்று இல்லாமல் வைத்து இருக்க உதவுகிறது. இந்த எண்ணெய்யை கொண்டு உங்கள் தலையை மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்கால்களுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து நரைமுடி வராமல் தடுக்கிறது. மேலும் கூந்தல் உதிர்தலை தடுத்து கூந்தல் வளர்ச்சியை சீராக்குகிறது.

பசியை தூண்டுதல்

பசியை தூண்டுதல்

கடுகு எண்ணெய் இயற்கையாகவே ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. இவை நமக்கு பசியை தூண்டுகிறது. நமது உடல் மெட்டாபாலிசத்தை அதிகரித்து ஜீரண சக்தியை மேம்படுத்தி பசியை தூண்டுகிறது. இது ஒரு இயற்கை ஊக்கியாக செயல்பட்டு ஜீரண திரவமான பித்த நீரை அதிகரித்து கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் நம் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

இப்படி எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடுகு எண்ணெய்யை உங்கள் உணவிலும் மற்றும் பழக்கவழக்கங்களிலும் சேர்க்க மறந்து விடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Health Benefits Of Mustard Oil

Mustard oil has been in use for culinary purposes as well as a holistic remedy since centuries. Learn the health benefits of mustard oil here.
Story first published: Saturday, February 10, 2018, 13:02 [IST]
Subscribe Newsletter