TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
தங்க பாலை குடித்தால் என்னென்ன மாயாஜாலங்கள் உடலில் நடக்கும்னு தெரியுமா...?
நாம் சாப்பிட கூடிய ஒரு சில உணவுகள் ஏராளமான நன்மைகளை நமக்கு தர வல்லது. குறிப்பாக ஒரு உணவை வேறொரு உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது அதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நம் உடல் ஒரு சில வகையான உணவுகளையே ஏற்று கொள்ளும். உடலின் தன்மைக்கு எதிரான உணவுகள் நிறைய பக்க விளைவுகளை தந்து உருகுலைய செய்து விடும்.
அந்த வகையில் குழந்தை முதல் பெரியவர்கள் ஆகும் வரை தினமும் குடித்து வரும் பாலுடன் மஞ்சளை சேர்த்து குடித்தால் பலவித மாயாஜாலங்கள் நம் உடலில் நடக்குமாம். குறிப்பாக புற்றுநோய், இதய கோளாறுகள், உடல் பருமன் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளுக்கு இது முற்றுப்புள்ள்ளி வைக்குமாம். வாங்க, எப்படினு இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தங்க பால் தெரியுமா...?
தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்குதேன்னு நினைக்குறீங்களா..? உண்மைதாங்க... பாலில் மஞ்சளை கலந்து சாப்பிட்டால் பலவித நன்மைகளை ஏற்படுத்தும் என்றே ஆய்வுகள் கூறுகின்றது. இந்த இரண்டின் கலவையையே "தங்க பால் " என்று அழைக்கிறார்கள். பொதுவாகவே மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. எத்தகைய வகையான உடல் சார்ந்த நோய்களையும் இது சரி செய்ய வல்லது. இதனுடன் பாலை கலந்து குடித்து வந்தால் பின்வரும் நன்மைகள் உடலில் நிகழுமாம்.
அதிக ஞாபக சக்திக்கு...
மஞ்சளில் curcumin என்ற முக்கிய மூல பொருள் உள்ளது. இதனை பாலுடன் கலக்கும் போது ஒரு சில மாயாஜாலங்கள் நடக்குமாம். இந்த தங்க பாலை குடித்து வந்தால் மூளையின் செயல்திறன் இரு மடங்காக கூடி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும், மூளை செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.
இதய நோய்களுக்கு முற்றுப்புள்ளி..!
இன்று பலருக்கும் அவர்கள் அறியாமலே அவர்களின் உடலில் இருக்க கூடிய நோய்களில் இந்த இதய நோயும் ஒன்று. இதய நோய்கள் வராமல் தடுக்க இந்த தங்க பாலை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும். மேலும், இவை கொலெஸ்ட்ரோலின் அளவை சீராக வைத்து இதயத்தை பாதுகாக்கிறது.
கெட்ட கொலெஸ்ட்ரோலை அழிக்க...!
உடலில் இரு வகையான கொலெஸ்ட்ரோல்கள் உள்ளன. அவை நல்ல கொலெஸ்ட்ரோல் மற்றும் கெட்ட கொலெஸ்ட்ரோல். இதில் கேட்ட கொலெஸ்ட்ரோல் தான் நம்மை குண்டாக மாற்றுகிறது. தினமும் மஞ்சள் கலந்த இந்த தங்க பாலை குடித்து வந்தால் உடல் எடை சட்டென குறைந்து விடும்.
புற்றுநோய்க்கு டாட்..!
புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய ஆற்றலும், அதனை உருவாமல் தடுக்கவும் இந்த தங்க பால் பார்த்து கொள்ளும். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் அவை புற்றுநோய் செல்கள் உடலில் உருவாகாமல் காக்கும். மேலும், உடலில் ஏற்கனவே உள்ள கிருமிகளையும் இவை கொன்று விடும்.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க...
பாலில் மஞ்சள், இலவங்க பொடி, மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக அமையும். குறிப்பாக இந்த பால் சர்க்கரையின் அளவை உடலில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும். மேலும், ரத்தத்தின் ஓட்டத்தையும் அளவையும் சீராக வைக்கும்.
எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்க...
மஞ்சளில் உள்ள Curcumin என்ற முதன்மையான மூல பொருள் அற்புத ஆயுர்வேத தன்மை கொண்டது. இதனை பாலில் கலந்து குடிப்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் நோய்கள் வராமல் காக்கும். மேலும், செல்களை சிதையாமல் பார்த்து கொள்ளும்.
மூட்டு பிரச்சினைக்கு
எலும்புகள் வலுவிழந்து உள்ளவர்கள் இந்த தங்க பாலை குடிப்பது மிக சிறந்ததாம். ஏனெனில், இவை மூட்டு வலிமையை அதிகரித்து மூட்டு கோளாறுகளை குணப்படுத்தும். மேலும், மூட்டில் ஏதேனும் வீக்கம் அல்லது காயங்கள் இருந்தால் அதனையும் இது சரி செய்து விடும்.
MOST READ: தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
ஜீரண பிரச்சினைக்கு
அளவுக்கு அதிகமாகவும், தேவையற்ற உணவுகளையும் சாப்பிட்டு விட்டு செரிமான கோளாறால் அவதிப்படுவோருக்கு ஒரு எளிய வழி இருக்கிறது. இந்த மஞ்சள் கலந்த பாலை குடித்தால் எப்படிப்பட்ட செரிமான பிரச்சினையும் குணப்படுத்தி விடலாமாம்.
தயாரிக்க தேவையான பொருட்கள்...
1 கப் பால்
1 ஸ்பூன் மஞ்சள்
சிறிய துண்டு இஞ்சி
1/2 ஸ்பூன் இலவங்க பொடி
1 ஸ்பூன் தேன்
தயாரிக்கும் முறை :-
முதலில் பாலை 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பிறகு அதனுள் மஞ்சள், இலவங்க பொடி, இஞ்சி சேர்த்து சிறிது மிதமான சூட்டில் 10 நிமிடம் வைத்து இறக்கி விடவும். அடுத்து இதனை வடிகட்டி குடித்து வரலாம். தேவையென்றால் தேனை சேர்த்து கொள்ளலாம்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.