Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும்
சரியா மூச்சுவிட முடியலையா? ஆஸ்துமா இருக்கா? அப்ப உடனே இத படிங்க...
இங்கு ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் அற்புத பானங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். இந்நோயானது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்கள் வீக்கமடைந்து, மூச்சுக்காற்று செல்லும் வழி சுருங்குவதால் ஏற்படும். நாள்பட்ட நோய்களானது வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படச் செய்யும்.
ஆஸ்துமா இருந்தால், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம், இருமல் போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். குறிப்பாக இருமலானது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடிக்கடி வரும். ஆஸ்துமாவிற்கு பெரும்பாலான மக்கள் இன்ஹேலரைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் எத்தனை நாட்கள் தான் இப்படி இன்ஹேலரைப் பயன்படுத்துவீர்கள். எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் அற்புத பானங்கள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தாலே இன்ஹேலருக்கு குட்-பை சொல்லலாம்.

ஜூஸ் #1
தேவையான பொருட்கள்:
பச்சை ஆப்பிள் - 2
செலரி - 6 தண்டுகள்
பார்ஸ்லி - 1 கட்டு
எலுமிச்சை - 1/4

ஜூஸ் #2
தேவையான பொருட்கள்:
அன்னாசி - 1/4
சோம்பு - 1 ஸ்பூன்
கேல் - 8 தண்டுகள்
முள்ளங்கி - 3 துண்டுகள்
எலுமிச்சை - 1/2

ஜூஸ் #3
தேவையான பொருட்கள்:
அன்னாசி - 1/4
வெள்ளரிக்காய் - 1
மிளகு - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1/2 ஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் - 2 கப்
கிரான்பெர்ரி ஜூஸ் - 1 கப்
மாதுளை ஜூஸ் - 1 கப்

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஜூஸ்களும் ஒரே மாதிரியான செய்முறையைக் கொண்டது. மூன்று ஜூஸ்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

நன்மைகள்:
இந்த ஜூஸ்களில் உள்ள மருத்துவ குணங்கள், நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, மூச்சுக்குழாயை விரிவடையச் செய்து, மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை நீக்கி, ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications
