Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
அடிக்கடி வயிறு வலிக்குதா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு...
இங்கு குடல் அழற்சி நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியானது, இரண்டு முக்கிய குடல் அழற்சி நோய்களாகும். இந்நோயால் இங்கிலாந்தில் சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை கவனிக்காமல் விட்டு, குடலில் விவரிக்க முடியாத எரிச்சல் ஏற்படுவதோடு, வீக்கத்தையும் உண்டாக்கும். அதோடு அழற்சி முற்றி குடல் பகுதி சிவந்து போவதோடு, கடுமையான வயிற்று வலியுடன், வயிற்று பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.
குடல் அழற்சி நோயை எரிச்சல் கொண்ட குடல் நோயுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். எரிச்சல் கொண்ட குடல் நோய் என்பது செரிமான அமைப்பின் இயக்கத்தில் உள்ள தவறால் சில நாட்கள் அசௌகரியமான உணர்வை உணர வைக்கும்.

குடல் அழற்சி நோய் என்பது ஒரு நாள்பட்ட, வாழ்நாள் முழுவதும் மற்றும் பலவீனமடையும் நிலை ஆகும். இந்நிலையில் செரிமான அமைப்பு மற்றும் அதன் செயல்பாடு முற்றிலும் தவறாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக குடல் அழற்சி நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்து மாத்திரைகளின் மூலம் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
இக்கட்டுரையில் குடல் அழற்சி நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, ஆரம்பத்திலேயே அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

வயிற்றுப் போக்கு
ஒருவருக்கு குடல் அழற்சி நோய் இருந்தால், திடீரென்று கழிவறையின் பயன்பாடு அதிகமாக இருக்கும். சில சமயங்களில் இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிவயிற்று வலி
வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் மிகவும் தீவிரமாக இருக்கும். சில நேரங்களில் மலம் கழிக்கும் முன் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்.

களைப்பு மற்றும் சோர்வு
ஒருவர் மிகுதியான களைப்புடன் இரவு நேரத்தில் கடுமையான வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கை உணர்ந்தால், அதுவும் குடல் அழற்சி நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

காய்ச்சல்
குடல் அழற்சி நோய் இருந்தால், சிலருக்கு அடிக்கடி காய்ச்சல் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

பசியின்மை மற்றும் எடை குறைவு
குடலில் பிரச்சனை இருந்தால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படாமல், உடல் எடை அதிகளவில் இழக்க நேரிடும். அதோடு பசியின்மையையும் உணரக்கூடும்.

இரத்த சோகை
அதிக இரத்த இழப்பு மற்றும் சரியாக சாப்பிட முடியாமல் போவதால், இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைந்து, இரத்த சோகை பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

வாய் புண்
உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறதா? இந்த பிரச்சனையை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், அதுவும் குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியே. எனவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
