தேனில் வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் அற்புத நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நட்ஸ்கள் ஆரோக்கியமானவை. அதிலும் மூளைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸ் இன்னும் நல்லது. இத்தகைய வால்நட்ஸை மருத்துவ குணம் நிறைந்த தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அது உடலில் உள்ள சில பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

Walnuts Combined With Honey Represent An Incredible Natural Remedy

Image Courtesy

ஏனெனில் இந்த கலவையில் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், புரோடீன்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இங்கு தேனில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சிறிது சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சோகை

இரத்த சோகை

1/2 கிலோ தேனில், 1/2 கிலோ வால்நட்ஸ் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, ஒரு ஸ்பூன் என தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதனால் இரத்த சோகையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

100 கிராம் வால்நட்ஸை, 100 கிராம் தேனுடன் சேர்த்து கலந்து, 45 நாட்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தலைவலி

தலைவலி

தலைவலியால் அதிகம் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் தேனில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சிறிது சாப்பிட்டு வாருங்கள்.

வயிற்று அல்சர்

வயிற்று அல்சர்

வயிற்றில் புண் இருந்தால், 20 கிராம் வால்நட்ஸை தட்டி, சுடுநீரில் போட்டு நன்கு காய்ச்சி அரைத்து வடிகட்டி, 2 ஸ்பூன் தேன் கலந்து, உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை நீங்கி, பாலியல் வாழ்க்கை சிறக்க, வால்நட்ஸ் மற்றும் தேனை சரிசம அளவில் ஒன்றாக கலந்து ஊற வைத்து, தினமும் மூன்று வேளை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 2 ஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி 20-30 நாட்கள் உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

குருதி ஊட்டக்குறை மற்றும் தூக்கமின்மை

குருதி ஊட்டக்குறை மற்றும் தூக்கமின்மை

100 கிராம் தேன் மற்றும் வால்நட்ஸை ஒன்றாக ஊற வைத்து, 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட, குருதி ஊட்டக்குறைபாடு நீங்கும். மேலும் தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Walnuts Combined With Honey Represent An Incredible Natural Remedy

The combination of walnuts and honey can be used as a powerful remedy as it assures that our body gets all the essential minerals, vitamins, carbs, fats, proteins, and much more.
Story first published: Friday, February 3, 2017, 12:52 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter