வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழச்சாறு குடிப்பது சரியா? தவறா?

Posted By: Aashika Natesan
Subscribe to Boldsky

எடையை குறைக்க என்று ஆரம்பித்தாலே நமக்கு வரும் பெரும்பாலான ஃப்ரீ அட்வைஸ்களில் ஒன்று காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாறு கலந்த நீரை அருந்துங்கள். அதில் உப்பு, தேன், இஞ்சி என சமையலறையில் இருக்கும் இன்னபிற அயிட்டங்களையும் சேர்க்கச் சொல்லி மெனுகார்டயே நீட்டுவார்கள்.

Unknown facts of Consuming Lemon Water On An Empty Stomach

அதையும் நம்பி, காலையில் முழிப்பு வந்ததுமே கிட்சனுக்குள் ஓடுபவர்களா நீங்கள், அப்போ இது உங்களுக்குத்தான். எலுமிச்சம் பழம் இயற்கையாகவே அமிலத்தன்மை வாய்ந்தது . அதனை காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான உடல்நலக்குறைபாடு ஏற்பட காரணமாய் அமைந்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களின் எதிரி :

பற்களின் எதிரி :

எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை பதம் பார்க்கும். தொடர்ந்து குடிப்பதால் பற்கள் சென்சிட்டிவாகி சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை உட்கொள்ளும் போது பற்கூச்சம் ஏற்படும். இது போன்ற ஜூஸ்களை குடிக்கும் போது ஸ்ட்ரா உதவியுடன் குடியுங்கள். நீண்ட நேரம் ஜூஸை வாயில் வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள்.

நெஞ்செரிச்சல் :

நெஞ்செரிச்சல் :

வெறும்வயிற்றில் எலுமிச்சம்பழச்சாறு குடிப்பதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். அதையே தொடரும் பட்சத்தில் வலி ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஜீரணத்தை பாதிக்கும் :

ஜீரணத்தை பாதிக்கும் :

காரமான அல்லது மசாலா உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் அஜீரணம் போன்றே ஆசிட் நிறைந்த எலுமிச்சம் பழச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் ஏற்படும். Gastroesophageal reflux disorder (GERD) எனப்படும் இந்த குறைபாடால் வாந்தி, நெஞ்செரிச்சல்,குமட்டல் போன்றவை ஏற்படும்.

எடையை குறைப்பு எனும் மாயை :

எடையை குறைப்பு எனும் மாயை :

சிலர் எடையை குறைக்க காலையில் எழுந்ததுமே லிட்டர் கணக்கில் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரை குடிப்பார்கள்.இது மிகவும் தவறான ஒன்று, ஆரம்பத்தில் எடை குறைப்பது போன்ற மாயை ஏற்ப்பட்டாலும் பின்னாட்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை குடிப்பதனால் வயிற்றில் அசிடிட்டி லெவல் கூடுகிறது. இதனால் உணவுகள் ஜீரணமாவதில் தாமதம் ஏற்படும்.

ஆபத்தானது :

ஆபத்தானது :

எலுமிச்சம்பழத்தில் விட்டமின் -சி நிறைந்திருக்கிறது. இதனை குடிப்பதால் சிறுநீர் அதிகம் வெளியேறும். அதாவது நம் உடலிலுள்ள சோடியம் சத்துக்களை வேகமாக நீக்கிடும். இதனால் டிஹைட்ரேஷன் ஏற்ப்பட்டு மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. தொடர்ந்து மரணம் நிகழவும் வாய்ப்புகள் அதிகம்.

ஆக்ஸலேட்ஸ்

ஆக்ஸலேட்ஸ்

எலுமிச்சம்பழத்தில் இருக்கும் ஆக்ஸலேட்ஸ் இயற்கையாக நமது உடலில் இருக்கும். அது மேலும் மேலும் அதிகரிகப்பதால் அது உடல்நலத்தை பாதிக்கும்.

எப்படி குடிக்கலாம் :

எப்படி குடிக்கலாம் :

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நார்மலான நீரை அருந்துங்கள். குளிர்ந்த நீரையோ அல்லது சூடான நீரையோ அருந்தாமல் உங்கள் ரூம் டெம்ப்பரேச்சரில் இருக்கும் நீரை அருந்துவதே சிறந்தது.

டயட்

டயட்

உங்களது உணவுப்பழக்கத்தில் எலுமிச்சம்பழத்தை சேர்த்தாக வேண்டும் என்கிறவர்கள். உணவுக்குப் பிறகான ஜூஸாக அதனைப் பருகலாம்.

ஏராளமான நன்மைகள் :

ஏராளமான நன்மைகள் :

எலுமிச்சம் பழச்சாறு குடிப்பதனால் ஏராளமான நன்மைகள் உண்டு தான் என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல்நலத்திற்கு கேடானது. அதனால், எடையை குறைக்கிறேன் என்று ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health diet fitness tips food
English summary

Unknown facts of Consuming Lemon Water On An Empty Stomach

Some people drink Lemon water on an empty stomach for weight loss, without knowing how it can adversely affect the body. One can face certain health issues due to this as mentioned in this article, read on.