வாங்கும் பாக்கெட் உணவில் ‘0 கொலஸ்ட்ரால்’ என்றிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இருப்பவர்கள் எல்லாருமே இதனை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று. இப்போதெல்லாம் பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது தான் வழக்கமாகி வருகிறது. அவற்றில் என்ன பொருட்களை சேர்கிறார்கள் அதனை சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை. நாம் சாப்பிடுகின்ற பொருளில் எது அதிகமாக இருக்க வேண்டும் எது குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

Tips to reading Nutrition labels in food products

பாக்கெட் உணவு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ரீ :

ஃப்ரீ :

பொதுவாக நமக்கு இலவசம் என்றாலோ அல்லது ஆஃபர் என்றாலோ நம்முடைய தேவையைத் தாண்டி வாங்கும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். வணிகச் சந்தை பெருகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் ஏதேதோ புதிய புதிய நுட்பங்களை பயன்படுத்தி தங்களுடைய விற்பனைகளை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றாக அவர்களது ப்ராடெக்ட்டில் ‘ஃப்ரீ' ,‘கொலஸ்ட்ரால் ப்ரீ'... இப்படியாக எதேதோ புதுப்புது வாசகங்களை சேர்கிறார்கள். உண்மையில் அது உடல் நலனுக்கு நல்லது தானா? அதனை எப்படி உறுதி செய்வது. அவர்கள் அப்படி குறிப்பிடுவதன் உள் அர்த்தம் என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

பாக்கெட் :

பாக்கெட் :

வாங்கும் பாக்கெட் பொருள் எவ்வளவு பேருக்கு வரும் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். உருளைக்கிழங்கு சிப்ஸ் ஒரு பாக்கெட் வாங்கினால் அது மூன்று நபர்கள் சாப்பிடலாம் என்று குறிப்பிட்டு இருக்கும். அதில் மொத்தம் 330 கலோரிகள் இருக்கிறதென்றால் அது மூன்று நபர்களுக்கு பகிரப்படும்.

அதிலிருக்கும் கலோரிஸ் அளவை பாருங்கள். அதிலும் கலோரிஸ் ஃப்ரம் ஃபேட் என்று தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் அதன் அளவும் கவனிக்க வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால் அந்த உணவை தவிர்த்திட வேண்டும்.

இப்போது என்னென்ன விஷயங்களில் எவற்றையெல்லாம் நோட் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கலோரிஸ் :

கலோரிஸ் :

எந்த உணவை வாங்கினாலும் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது கலோரி தான். நீங்கள் அன்றாடம் எடுக்கும் உணவைப் போக இந்த பாக்கெட் உணவிலிருந்து கிடைக்க கூடிய கலோரிகள் எத்தனை என்று கணக்கிடுங்கள். உங்களுக்கு தேவையான, அதாவது ஒரு நாளில் நீங்கள் எடுக்க வேண்டிய கலோரிகள் எத்தனை என்பதை Harris-Benedict formula மூலமாக கணக்கிடலாம்.

உங்களுடைய வயது, பாலினம், உயரம், எடை மற்றும் உங்களது உடலுழைப்பு ஆகியவற்றைக்கொண்டு இது கணக்கிடப்படுகிறது.

கொழுப்பு :

கொழுப்பு :

அடுத்தப்படியாக நீங்கள் வாங்கும் பொருளில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள். கொழுப்பினையே தனித்தனியாக பேரைக் குறிப்பிட்டிருப்பார்கள்.

வெறும் ஃபேட் என்று பெயர் இருப்பதை மட்டும் பார்க்காமல் அதன் அறிவியல் பெயரையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

எல்லா கொழுப்புமே கெட்ட கொழுப்பு என்று சொல்ல முடியாது. ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சாட்டுரேட்டட் ஃபேட் மட்டும் தவிர்ப்பது நலம். மற்றபடி பாலிஅன் சாட்டுரேட்டட் மற்றும் மோனோ சாட்டுரேட்டட் போன்றவை எல்லாம் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இதே நேரத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் "ஃபேட் ஃப்ரீ". கொழுப்பு என்றால் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அறிந்து வணிகச் சந்தையில் புகுதப்பட்ட ஓர் விற்பனை யுக்தி தான் இந்த ஃபேட் ப்ரீ.

ஃபேட் ப்ரீ என்றதும் அதனை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம் என்று அர்த்தம் கிடையாது.

சுவையில்லை :

சுவையில்லை :

பொதுவாக ஃபேட் ஃப்ரீ உணவு வகை சுவையாக இருக்காது. அதன் சுவையை கூட்டுவதற்காக அதில் இனிப்பு சுவை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சேர்க்கப்படும்.

கொழுப்பு குறைவு என்று இந்தப் பக்கம் சொல்லிவிட்டு சர்க்கரையை அதிகம் சேர்த்த பொருளை சாப்பிடுவது நம் உடல் நலனுக்கு மிகவும் கேடு தரக்கூடியது என்பதை உணர வேண்டும்.

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் மில்லி கிராமில் கணக்கிடப்படும். ஒரு வேளை நீங்கள் வாங்கும் பாக்கெட் உணவில் 0 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் என்று குறிப்பிட்டிருந்தால் அதில் சுத்தமாக கொலஸ்ட்ராலே இல்லை என்று அர்த்தம் கிடையாது.

நம் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிப்பது hydrogenated என்ற ஒரு வகை கொழுப்பு தான். இந்த ஹைட்ரோஜெனேட்டட் கொழுப்பு என்பது கொலஸ்ட்ரால் மற்றும் சாட்டுரேட்டட் கொழுப்பினை விட மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது.

நீங்கள் வாங்கியிருக்கும் பாக்கெட்டையே இன்னும் உற்று கவனித்தப்பாருங்கள். அதில் எங்கேனும் partially hydrated என்று குறிப்பிட்டிருப்பார்கள். இப்படியிருந்தால் அந்த உணவு உங்களின் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

சோடியம் :

சோடியம் :

நீங்கள் வாங்கும் உணவுப் பொருளில் 140 மில்லி கிராம் சோடியம் இருந்தால் அதனை குறைந்த அளவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு நாளில் உங்களுக்கு 2300 மில்லி கிராம் சோடியம் மட்டுமே போதுமானது.

இந்த பாக்கெட் உணவைத் தவிர்த்து பிற உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்பதால் 140 என்ற அளவு மிகவும் அதிகமானது. இப்படி சோடியம் அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

பொட்டாசியம் :

பொட்டாசியம் :

பொட்டாசியம் எல்லா பாக்கெட் உணவுகளிலும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பதால் நீங்கள் வாங்கியிருக்கும் உணவுப் பொருளில் பொட்டாசியம் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்.

பொட்டாசியம் நம் பிரசரை கண்ட்ரோலில் வைத்திருக்க உதவுகிறது.

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் என்பது ஸ்டார்ச், காம்ப்லெக்ஸ் கார்போஹைட்ரேட்,டயட்டரி ஃபைபர், சுவையூட்டிகள், செரிக்காத இன்னபிற சேர்க்கைகள் இவற்றின் கூட்டுக் கலவை அளவு தான் கார்போஹைட்ரேட் என்பது.

கார்போஹைட்ரேட் அளவை விட சுகர் அளவு கூடுதலாக இருந்தால் அதனை நீங்கள் வாங்கலாம். ஏனென்றால் அதில் செயற்கையான சுவையூட்டிகள் மற்றும் கெமிக்கல்களுக்கு பதிலாக சர்க்கரை அளவு தான் அதிகமாக இருக்கிறது.

நேரடியாக உங்களுக்கு கிடைக்க கூடிய கார்போஹைட்ரேட் அளவு மட்டும் தெரிய வேண்டுமா? அப்படியானால் கார்போஹைட் அளவிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் சர்க்கரை அளவினை குறைத்தால் போதும்.

டயட்டரி ஃபைபர் :

டயட்டரி ஃபைபர் :

இது கார்போஹைட்ரேட் அளவிற்குள் தான் அடங்கும். இந்த ஃபைபர் கார்போஹைட்ரேட் உடனடியாக ரத்தத்தில் கலந்து ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். கார்போஹைட்ரேட்டிலிருந்து டயட்டரி ஃபைபர் அளவை கழித்தால் கிடைக்கும் அளவு கார்போஹைட்ரேட் உங்கள் குளோக்ஸ் அளவினை அசைத்து பார்க்க கூடியது என்பதை உணருங்கள்.

சர்க்கரை :

சர்க்கரை :

பெரும்பாலான உணவுப்பொருளில், சர்க்கரை இடம்பெற்றிருக்கும். எல்லாச் சர்க்கரையும் தீங்கு விளைவிக்க கூடியது என்று சொல்ல முடியாது. நீங்கள் சாப்பிடக்கூடிய பழங்கள், நட்ஸ்,தானியங்கள் போன்றவற்றிலும் சர்க்கரை இருக்கிறது.

அவை உடலுக்கு நன்மையையே செய்கிறது . சர்க்கரை அதிகமிருக்கும் பொருளை வாங்கும் போதுஃபைபர் அளவை பாருங்கள். அது அதிகமாக இருந்தால், உங்கள் உடலில் அதிக சர்க்கரையை சேராமல் பார்த்துக் கொள்ளும்.

முடிந்தவரையில் சர்க்கரையை அதிகம் சேர்க்காமல் இருப்பது தான் நல்லது.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

ஒரு நாளில் 0.45 கிராம் ப்ரோட்டீன் எடுத்துக் கொண்டாலே போதும். நீங்கள் அன்றாடம் சாப்பிடுகிற காய்கறி மற்றும் பழங்களிலேயே அதிகப்படியான ப்ரோட்டீன் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் தாண்டி பாக்கெட்டுகளில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்க வேண்டிய அவசியமில்லை அப்படியே நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவை கழிவாக வெளியேறிடும்.

பெர்சண்ட் டெய்லி வேல்யூ :

பெர்சண்ட் டெய்லி வேல்யூ :

உணவுகளில் நிறைய பெர்சண்ட் டெய்லி வேல்யூ என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். இது ஒரு நாளைக்கு எத்தனை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கலோரிக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டால் இதனை கண்காணிக்கலாம்.

அதிலிருக்கும் நியூட்ரிஷியன் அளவு என்பது ஒரு நாளில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் அளவாக இருக்க வேண்டும்.

Ingredients :

Ingredients :

அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலில் அளவின் அடிப்படையில் அந்த ஆர்டர் இருக்கும். அந்த பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள் தான் மூலப்பொருளாக கொள்ளலாம்.

முழு கோதுமை என்று நினைத்து நீங்கள் வாங்கும் பொருளில் இருக்கும் Ingredients பட்டியலில் பார்த்தால் முதலிடத்தில் வீட் க்ரைன் இருக்கிறதா அல்லது வீட் ஃப்லோர் இருக்கிறதா என்று உறுதி செய்திடுங்கள். இவை இரண்டு முழு கோதுமைக்கு ஈடாகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to reading Nutrition labels in food products

Tips to reading Nutrition labels in food products