நட்ஸ் உங்களுக்கு அலர்ஜியை தரும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

Written By:
Subscribe to Boldsky

50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு அலர்ஜி உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. நட்ஸ் அலர்ஜி என்பது முக்கியமான உணவு அலர்ஜியாகும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாருக்கும் வர வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளில் 14 சதவீதம் பேருக்கும் ட்ரீ நட் அலர்ஜியும், 20 சதவீதம் பேருக்கு வேர்க்கடலை சாப்பிடுவதாலும் அலர்ஜி ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்ஸ் வகைகள் :

நட்ஸ் வகைகள் :

நட்ஸ் ட்ரீ நட்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் வால்நட்ஸ், முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவற்றை நாம் வழக்கமாக சாப்பிட்டு வருகின்றோம்.

வேர்க்கடலை :

வேர்க்கடலை :

வேர்க்கடலை ட்ரீ நட்ஸ் வகைகளுக்குள் சேராது. இது மண்ணிற்கு அடியில் உண்டாகிறது. இதனால் இதனை நட்ஸ் என்று கூற முடியாது. ஆனால் ட்ரீ நட்ஸ் சாப்பிடுவதால் வருகின்ற அலர்ஜியும், வேர்க்கடலை சாப்பிடுவதால் வரும் அலர்ஜியும் ஒரே மாதிரியாக இருக்கும்.

அலர்ஜி :

அலர்ஜி :

உங்களுக்கு ஏதேனும் ஒரு ட்ரீ நட்ஸ் அலர்ஜி இருக்கிறது என்றால், பிற வகையான ட்ரீ நட்ஸ்களை சாப்பிடும் போதும் அலர்ஜி உண்டாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 25 முதல் 40 சதவீத மக்களுக்கு ட்ரீ நட்ஸ்கள் மற்றும் நிலக்கடலை இரண்டிலுமே அலர்ஜி உள்ளது.

தோல் அலர்ஜி :

தோல் அலர்ஜி :

நட்ஸ் சாப்பிட்டால் உங்களுக்கு மிகச்சிறிய அளவு இந்த அறிகுறிகள் சருமத்தில் தோன்றலாம்.

  • அரிப்பு
  • தோல் சிவத்தல்
  • தடிப்புகள்

இவ்வாறு உண்டானால், குளிர்ந்த அல்லது சூடான நீரில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்திடம் கொடுக்கலாம்.

மூக்கு, தொண்டை, கண் :

மூக்கு, தொண்டை, கண் :

நட்ஸ் உங்களுக்கு மூக்கு, தொண்டை மற்றும் கண்களில் அலர்ஜியை ஏற்படுத்திவிட்டது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

  • மூக்கில் நீர் வடிதல்
  • தும்மல்
  • வறண்ட தொண்டை
  • கண்களில் அரிப்பு மற்றும் நீர் வடிதல்
செரிமான பிரச்சனை :

செரிமான பிரச்சனை :

நட்ஸ் உங்களுக்கு செரிமான மண்டலத்தில் அலர்ஜியை ஏற்படுத்திவிட்டது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி
  • வயிற்று வலி
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms of a Nut Allergy

Symptoms of a Nut Allergy
Story first published: Tuesday, September 12, 2017, 17:38 [IST]
Subscribe Newsletter