முதுகு வலி உங்களுக்கு இருக்கும் தீவிர பிரச்சனையைத் தான் சுட்டிக் காட்டுகிறது எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

முதுகு வலி அனைத்து வயது மக்களும் அவஸ்தைப்படும் ஒரு பொதுவான பிரச்சனை. உலகில் 80% மக்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில், முதுகு வலியால் நிச்சயம் அவஸ்தைப்படக்கூடும். பெரும்பாலும் முதுகு வலி, தசைப்பிடிப்புகள் அல்லது அதிக அழுத்தம் அல்லது ஹெர்னியேட்டடு வட்டு மூலமாக ஏற்படும். அதே சமயம் அது தானாகவே சரியாகியும் விடும்.

Signs That Show Your Back Pain Signals A More Serious Problem

ஒருவேளை இந்த வலி பல நாட்களாக இருந்தால், ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அப்போது அதைக் கண்டுபிடித்து உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். சில நேரங்களில் முதுகு வலி, உடலில் உள்ள சில பிரச்சனைகளின் தீவிரத்தையும் சுட்டிக் காட்டும். இங்கு எந்த பிரச்சனைகள் இருந்தால் முதுகு வலி வரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரவு நேரத்தில் வலி

இரவு நேரத்தில் வலி

இரவில் தூங்கும் போது, தூங்கும் நிலையை மாற்றும் தருணம் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள். ஏனெனில் இது முதுகு பகுதியில் கட்டி இருப்பதற்கான ஓர் அறிகுறியாகவும் இருக்கும்.

கணிக்க முடியாத வலி

கணிக்க முடியாத வலி

வலி ஏற்படும் போது, அது மேல் அல்லது கீழ் முதுகுப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட தசை அல்லது எலும்பு இணைப்புகளுடன் தொடர்புடையது போன்று தெரியாமல் இருந்தால், அது மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.

காலையில் எழுந்ததும் வலி

காலையில் எழுந்ததும் வலி

காலையில் எழுந்ததும் முதுகுப் பகுதியில் லேசாக வலியை உணர்வது சாதாரணம். ஆனால் இந்த வலியோ 30 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடித்திருந்தால், அது ஆன்கில்லோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ் போன்ற அழற்சி கீல்வாதத்தை உணர்த்துகிறது என்று அர்த்தம்.

எலும்பு முறிவு அபாயம்

எலும்பு முறிவு அபாயம்

சமீபத்தில் விபத்து ஏற்பட்ட பின், முதுகு பகுதியில் வலி ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இம்மாதிரியான நேரத்தில் வலி ஏற்பட்டால், அமுது முதுகுத்தண்டு முறிவு அல்லது இதர பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும்.

நீர்ப்பை இழப்பு

நீர்ப்பை இழப்பு

இடுப்பு முதுகில் உள்ள நரம்பு வேர்களில் அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படும் போது, நீர்ப்பை அல்லது குடலியக்கம் கட்டுப்பாடின்றி இயங்கும். இந்நேரத்தில் முதுகுப் பகுதியில் வலி ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs That Show Your Back Pain Signals A More Serious Problem

Read this article to know about the signs of back pain which might indicate other serious problems.
Story first published: Wednesday, March 8, 2017, 17:47 [IST]
Subscribe Newsletter