Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
மதியம் சீக்கிரம் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த துவையலை செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்..
Paruppu Thuvaiyal Recipe In Tamil: மதிய வேளையில் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ருசியாகவும் சாதத்துக்கு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் துவையல் செய்யுங்கள். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் முருங்கைக்கீரை துவையல், பிரண்டை துவையல், தேங்காய் துவையல், வாழைப்பூ துவையல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அதுவும் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு கொண்டு துவையல் செய்யும் போது, அது மிகவும் ருசியாக இருக்கும். இந்த துவையலை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால், சுவை வேற லெவலில் இருக்கும். இல்லாவிட்டால் ரசம் வைத்து, இந்த துவையலை சைடு டிஷ்ஷாகவும் தொட்டு சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த பருப்பு துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 15
* வரமல்லி - 10
* கடலைப்பருப்பு - 1 கப்
* துவரம் பருப்பு - 1 கப்
* பூண்டு - 5 பல்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி தண்டு - சிறிது
* புளி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 1
* காஷ்மீரி வரமிளகாய் - 1
* துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, வரமல்லி ஆகியவற்றை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
தண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிய துண்டு புளி, 1 வரமிளகாய் மற்றும் 1 காஷ்மீரி
வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி, துவையல் போன்று சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அரைத்த துவையலை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொண்டால், சுவையான பருப்பு துவையல் தயார்.



Click it and Unblock the Notifications
