Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
முருங்கைக்கீரையும், வேர்க்கடலையும் வெச்சு.. சாதத்துக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. ருசியா இருக்கும்..
Murungai Keerai Thuvaiyal Recipe In Tamil: மதியம் உங்களுக்கு சமைக்க பிடிக்கலையா? சிம்பிளா அதே சமயம் சத்தானதா ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? 2 கைப்பிடி முருங்கைக்கீரையும், வேர்க்கடலையும் இருந்தால், அவற்றைக் கொண்டு துவையல் செய்யுங்கள்.
இந்த துவையலை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடும் போது, அட்டகாசமாக இருக்கும். முருங்கைக்கீரையை இந்த பக்குவத்தில் துவையல் செய்தால், பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருங்கைக்கீரை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
* பச்சை வேர்க்கடலை - 1 கைப்பிடி
* மல்லி - 1 ஸ்பூன்
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* சின்ன வெங்காயம் - 6
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, பச்சை வேர்க்கடலை, மல்லி, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து லேசாக நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின் வறுத்ததை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து நன்கு
வறுத்து, அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்கி,
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து, நிறம் மாற வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புகள், வரமிளகாய், புளி, சின்ன
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த முருங்கைக்கீரை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி, கொரகொரவென்று அரைக்க வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில் பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலந்தால், சுவையான முருங்கைக்கீரை
துவையல் தயார்.



Click it and Unblock the Notifications