இவைகளால் தான் சிறு குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் செரிமான மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அதில் சில நன்மை விளைவிப்பதாகவும், இன்னும் சில தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கும். எப்போது செரிமான மண்டலத்தில் இவ்விரண்டின் அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறதோ, அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

Risk Factors that Contribute to Small Intestinal Bacterial Overgrowth

அதிலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு செரிமான பாதையில் அதிகரிக்கும் போது, நிலைமை இன்னும் மோசமாகிறது. குறிப்பாக செரிமான மண்டலத்திலேயே சிறு குடல் தான் உணவுகளை செரித்து, அதில் உள்ள சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

இப்பகுதியில் கட்டாயம் பாக்டீரியாக்கள் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சில காரணிகளால் சிறு குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. இங்கு அந்த காரணிகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்குழி நோய்

உடற்குழி நோய்

ஆய்வுகளின் படி, உடற்குழி நோய் உள்ள 66% மக்களுக்கு சிறு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீயாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்களது குடலை சோதிக்கும் போது, அவர்களின் குடலில் 43% கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி இருப்பது தெரிய வந்துள்ளது.

மருந்துகள்

மருந்துகள்

நோயெதிர்ப்பு மண்டலத்தை அல்லது செரிமான பாதையை பாதிக்கும் மருந்துகள், சிறு குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே கண்ட மாத்திரைகளை எடுக்காதீர்கள்.

ஆட்டோ-இம்யூன் நோய்கள்

ஆட்டோ-இம்யூன் நோய்கள்

நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து ஏற்படும் நோய்களும், சிறு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

முதுமை

முதுமை

60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு, சிறு குடலில் பாக்டீரியாக்களின் மிகை வளர்ச்சிக்கான வாய்ப்பு ஏராளமாக உள்ளது.

ரோஸாசியா

ரோஸாசியா

ஆய்வு ஒன்றில் ரோஸாவியாவிற்கும், சிறு குடல் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் ரோஸாசியாவை உண்டாக்கும் பாக்டீரியா அழிக்கப்படும் போது, சிறு குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Risk Factors that Contribute to Small Intestinal Bacterial Overgrowth

Know about the risk factors that lead to Small Intestinal Bacterial Overgrowth (SIBO) with the help of this article.
Story first published: Saturday, February 18, 2017, 10:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter