மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளால் உடலின் மூலை முடுக்குகளில் ஏராளமான அளவில் டாக்ஸின்கள் சேர்ந்திருக்கும். இப்படி டாக்ஸின்களின் அளவு உடலினுள் அதிகமானால், ஒரு கட்டத்தில் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அவ்வப்போது ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

Remove All Toxins From The Body In 3 Days

இக்கட்டுரையில் மூன்று நாட்களில் ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்ய பின்பற்ற வேண்டியவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றினால், ஒட்டுமொத்த உடலும் சுத்தமாவதோடு, நோய்கள் மற்றும் தொற்றுக்களின் அபாயமும் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நினைவில் கொள்ள வேண்டியவை:

நினைவில் கொள்ள வேண்டியவை:

ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்ய முயற்சிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே பால் பொருட்கள் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் பொருட்கள் மிகவும் மெதுவாக செரிமானமாவதால், உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது அவற்றை உட்கொண்டால், இடையூறு ஏற்படும்.

செய்முறை #1

செய்முறை #1

உடலை சுத்தம் செய்யும் முதல் நாள் காலை உணவிற்கு முன் 1/2 டம்ளர் நீரில், 2 எலுமிச்சையைப் பிழிந்து குடிக்க வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

காலை உணவிற்கு பின், 1 1/2 டம்ளர் அன்னாசி ஜூஸ் குடிக்க வேண்டும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

செய்முறை #3

செய்முறை #3

காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு இடைப்பட்ட காலத்தில் 1- 1 1/2 டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இது சுவாச பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

செய்முறை #4

செய்முறை #4

மதிய உணவு வேளையில் 1 1/2 டம்ளர் வாழைப்பழம், அவகேடோ, பீட்ரூட் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிக்க வேண்டும். இதனால் இதில் உள்ள பொட்டாசியம், உடலை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

செய்முறை #5

செய்முறை #5

இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் இஞ்சி, புதினா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட டீயைக் குடிக்க வேண்டும். இதனால் சளித் தேக்கம், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் அகலும்.

செய்முறை #6

செய்முறை #6

இரவில் படுக்கும் முன் 340 மிலி கிரான்பெர்ரி ஜூஸைக் குடிக்க வேண்டும். இது நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, தொற்றுகளில் இருந்து விடுவிக்கும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தம் மற்றும் சிறுநீருக்கு மிகவும் நல்லது.

குறிப்பு

குறிப்பு

இந்த செய்முறையை அடுத்த 2 நாட்களும் பின்பற்ற வேண்டும். இதனால் ஒட்டுமொத்த உடலும் மூன்றே நாட்களில் சுத்தமாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remove All Toxins From The Body In 3 Days

This 3 day-cleansing system will help you change your diet, reduce the desire for processed foods and detoxify your body.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter