ஆண் மலட்டுத்தன்மையை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் வெளியே சொல்லத் தயங்கும் முக்கிய ஆரோக்கிய பிரச்சனை தான் விறைப்புத்தன்மை குறைபாடு அல்லது ஆண் மலட்டுத்தன்மை. பொதுவாக இந்த பிரச்சனையை 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் சந்திப்பார்கள். இந்த பிரச்சனை உள்ள ஆண்கள் மிகுந்த மன இறுக்கத்துடன் இருப்பார்கள்.

Natural Ways To Treat Male Infertility

ஒரு ஆணுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் மாற்றங்கள், வயது போன்றவை முக்கிய 2 காரணிகளாகும். இதோடு உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்றவைகள் உடலில் இரத்த நாளங்களைக் குறுகச் செய்து, இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைபாட்டை உண்டாக்கும்.

மேலும் மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம், பதட்டம் போன்றவைகளும் ஒரு ஆணின் பாலியல் வாழ்க்கைக்கு பாதிப்பை உண்டாக்கும். இக்கட்டுரையில் ஆண்களின் மலட்டுத்தன்மை அல்லது விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

ஆண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்வதற்கு வெங்காயம் உதவும். இதற்கு அதில் உள்ள பாலுணர்வு பண்புகள் தான் காரணம். ஆகவே முன்கூட்டியே விந்து வெளியேறுதல் மற்றும் மலட்டுத்தன்மையை சரிசெய்ய, வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அத்துடன் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். முக்கியமாக இந்த கலவையை சாப்பிட்ட 2 மணிநேரத்திற்கு வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் பாலுணர்வு பண்புகள் உள்ளன. அதோடு, இதில் ஜின்ஜெரால் என்னும் முக்கிய பொருளும் உள்ளது. இந்த அனைத்து குணங்களும் இரத்த சர்க்கரை அளவை தூண்டுவதோடு, ஆண் மலட்டுத்தன்மை மற்றும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையை சரிசெய்யும்.

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம்

பேரிச்சம் பழத்தை ஆண்கள் தினமும் உட்கொண்டு வந்தால், பாலியல் வாழ்க்கை சிறக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் உலர்ந்த பேரிச்சையை உட்கொள்வது மிகவும் நல்லது. ஆகவே 3 பேரிச்சையுடன் பாதாம் மற்றும் பிஸ்தாவை சரிசம அளவில் எடுத்து உட்கொள்ளுங்கள்.

குங்குமப்பூ

குங்குமப்பூ

பழங்காலத்தில் மலட்டுத்தன்மையை சரிசெய்வதற்கு குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வந்தது. குங்குமப்பூ பாலியல் வாழ்வை சிறக்க உதவுவதோடு, நரம்புகளை ரிலாக்ஸ் அடையவும் செய்யும். ஆகவே விறைப்புத்தன்மை குறைபாட்டால் அவஸ்தைப்படும் ஆண்கள், பால் அல்லது உணவில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கை

முருங்கை

முருங்கையில் பாலுணர்வு பண்புகள் ஏராளமாக உள்ளது. அதுவும் அதன் காய், பூ, இலைகள் என அனைத்திலும் இந்த பண்புகள் நிறைந்துள்ளது. எனவே ஆண்மை குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு உள்ள ஆண்கள், முருங்கைப் பூவை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் 1-2 முறை குடிக்க விரைவில் பலன் கிடைக்கும்.

கேரட்

கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டீன் மட்டுமின்றி, அதிகளவு பாலுணர்வு பண்புகளும் நிறைந்துள்ளன. இந்த 2 பண்புகளும் ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்யும். ஆகவே ஆண்கள் தினமும் கேரட் சாலட் வடிவிலோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்வது மிகவும் நல்லது.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

பழங்காலம் முதலாக ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்ய அஸ்பாரகஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் பாலுணர்வு பண்புகள் அதிகளவில் உள்ளது. இத்தகைய அஸ்பாரகஸின் வேரை நன்கு உலர வைத்து, பாலில் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் 2 முறை குடிக்க நல்ல பலனைக் காணலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் நிறைந்துள்ளது. இத்தகைய பண்புகள் நிறைந்த பூண்டை தினமும் 1-2 பற்கள் சாப்பிட்டு வர, ஆண் மலட்டுத்தன்மை சரியாவதோடு, ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் வளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே ஆண்கள் தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடிப்பது நல்லது.

பாதாம்

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். ஆகவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர் சேர்த்து கலந்து, இரவில் தூங்கும் முன் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways To Treat Male Infertility

Here are some natural foods and ways to treat male infertility. Read on to know more...
Story first published: Sunday, December 17, 2017, 10:30 [IST]