உடலில் எந்த பிரச்சனைகள் இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மலச்சிக்கல் மோசமான உணவுப் பழக்கம், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படும் என அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான நேரங்களில் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம், இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

இருப்பினும் சில நேரங்களில், உடலினுள் உள்ள சில பிரச்சனைகள் மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கும் என்பது தெரியுமா? இக்கட்டுரையில் உடலில் எந்த பிரச்சனைகள் இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும் என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஹைப்போ தைராய்டின் போது உடலில் தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரப்பதால், அது உடலின் பெரும்பாலான செயல்பாட்டை பாதித்து, செரிக்கப்பட்ட உணவுகள் செரிமான பாதையில் சீராக செல்வதில் இடையூறு ஏற்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

பாலிபார்மசி

பாலிபார்மசி

வயதான காலத்தில் 4 மாத்திரைகளுக்கு மேல் எடுக்கும் போது, அது மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வைக்கும். குறிப்பாக மன இறுக்க நிவாரணிகள், வலி நிவாரணிகள், இரும்புச்சத்து மாத்திரைகள், இரத்த அழுத்தம் மற்றும் அலர்ஜி மாத்திரைகள் போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும். சில நேரங்களில் ஆன்டாசிட் போன்றவைகளும் ஏற்படுத்தும்.

குடலியக்க பிரச்சனைகள்

குடலியக்க பிரச்சனைகள்

நாள்பட்ட இரைப்பை குடல் அழற்சி இருந்தால், அது மலச்சிக்கலை தீவிரமாக்கும்.

நரம்பியல் பிரச்சனைகள்

நரம்பியல் பிரச்சனைகள்

நரம்பியல் பிரச்சனைகளான ஸ்களீரோசிஸ், பார்கின்சன் நோய் அல்லது முதுகுத் தண்டு காயம் போன்றவையும் மலச்சிக்கலை உண்டாக்கும். நரம்பியல் பிரச்சனைகள் நரம்புகளை பாதித்து, குடலில் உள்ள தசைகளைச் சுருங்க செய்து, மலம் சீராக செல்ல முடியாமல் தடுக்கும்.

குடல் தொற்றுகள்

குடல் தொற்றுகள்

சில நேரங்களில் குடலில் பாக்டீரியல் அல்லது இதர தொற்றுகள் இருந்தால், அதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மலக்குடல் பிரச்சனை

மலக்குடல் பிரச்சனை

மலக்குடலில் பிரச்சனை இருந்தாலோ, அடிவயிற்று பகுதியில் புற்றுநோய் இருந்தாலோ, அதுவும் மலச்சிக்கலை உண்டாக்கும்.

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்

குடலில் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும் போது, மலம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, மலச்சிக்கலை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medical Conditions That Can Lead To Constipation

There are some medical conditions that can lead to constipation. Read on to know more...
Story first published: Wednesday, May 31, 2017, 10:00 [IST]