Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்கள் கால் பெருவிரலுக்கு கீழே வீக்கம் உள்ளதா? இதைப் போக்க இதோ ஓர் அற்புத வழி!
இங்கு கால் பெருவிரல் வீக்கத்தைப் போக்க உதவும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கால் பெருவிரல் வீக்கம் ஏற்படுவதற்கு காரணம் அவ்விடத்தில் உப்பு தேங்கியிருப்பதால் தான். மேலும் ஆன்ஜினா, காய்ச்சல், கீல்வாதம், மோசமான வளர்சிதை மாற்றம், கீல்வாத நோய், மோசமான உணவு மற்றும் நீண்ட காலமாக அசௌகரியமான காலணிகளாலும் இது உருவாகலாம்.

இம்மாதிரியான பெருவிரல் வீக்கம் உள்ளவர்கள், காலணிகளை அணிவதில் சிரமத்தை உணர்வார்கள். இப்படி பெருவிரலில் உள்ள வீக்கத்தை நீக்க அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்றும் பலரும் நினைப்பார்கள். ஆனால் இயற்கை வழிகளின் மூலமும் அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தீர்வு
கால் பெருவிரலில் உள்ள வீக்கத்தைப் போக்க வேண்டுமானால், முதலில் உடலை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் அற்புத பானம் உடலை சுத்தம் செய்து, உடலில் இருந்து உப்புக்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:
பொடித்த பிரியாணி இலை - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 300 மிலி

தயாரிக்கும் முறை:
நீரில் பிரியாணி இலையைப் போட்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, நாள் முழுவதும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.

எவ்வளவு காலம் பின்பற்ற வேண்டும்?
இந்த சிகிச்சையை தொடர்ச்சியாக 3 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலையில் இந்நீரைத் தயாரித்து, மறுநாள் பருக வேண்டும். பின் 7 நாட்கள் கழித்து மீண்டும் இந்த சிகிச்சையை பின்பற்ற வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கக்கூடும்
இந்த சிகிச்சையின் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடலில் உள்ள உப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications
