தினமும் ஒரு கப் சோம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இரைப்பை குடல் பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறீர்களா? உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிக்கிறீர்களா? மூட்டு வலியால் கஷ்டப்படுகிறீர்களா? இந்த அனைத்து கேள்விகளுக்கும் உங்களது பதில் ஆம் என்றால், சோம்பு கொண்டு தேநீர் தயாரித்துக் குடியுங்கள்.

சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வளிக்கும். அதிலும் இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால், பல்வேறு உடல் உபாதைகளால் அவஸ்தைப்பட நேரிடுவதால், சோம்பு கொண்டு தேநீர் தயாரித்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது.

இக்கட்டுரையில் சோம்பு டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிடிப்புக்கள்

பிடிப்புக்கள்

சோம்பு டீ குடிப்பதால், குடல் மற்றும் உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் பிடிப்புக்கள் குறையும். உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால், முதலில் உடலில் உள்ள பிடிப்புக்களைக் குறைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

அஜீரண கோளாறுகள்

அஜீரண கோளாறுகள்

சோம்பு டீ இரைப்பை குடல் பிரச்சனைகளான அஜீரண கோளாறுகளை சரிசெய்யும். குறிப்பாக நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், சோம்பு டீ குடிக்க விரைவில் குணமாகும்.

வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை

வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை

ஒருவர் தினமும் ஒரு டம்ளர் சோம்பு டீ குடித்து வந்தால், அது வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இதற்கு சோம்பினுள் உள்ள உட்பொருட்கள் தான் முக்கிய காரணம்.

பெண்களின் ஆரோக்கியம்

பெண்களின் ஆரோக்கியம்

சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் கால பிரச்சனைகளைக் குறைக்கும். மேலும் இது பெண்களின் பாலியல் உணர்வைத் தூண்டி, பாலியல் வாழ்க்கையை செழிப்பாக்கும். முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சோம்பு நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.

அசிடிட்டி குறையும்

அசிடிட்டி குறையும்

சோம்பு உடலில் உள்ள அசிடிட்டியின் அளவைக் குறைக்கும். குறிப்பாக இது உடலினுள் இருக்கும் புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கும்.

சிறுநீர் பெருக்கி

சிறுநீர் பெருக்கி

சோம்பு தேநீர் ஒரு சிறுநீர் பெருக்கியாகும். இந்த டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரக பிரச்சனைகள் வருவது குறையும்.

மூட்டு வலிகள்

மூட்டு வலிகள்

சோம்பு டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது ஆர்த்ரிடிஸ் மற்றும் மூட்டு வலிகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

சோம்பு டீயை ஒருவர் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், அது உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளைக் குறைக்க உதவும். ஒருவேளை இரத்த அழுத்தத்திற்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் குடியுங்கள்.

எடை குறைவு

எடை குறைவு

சோம்பு டீ கலோரிகள் எடுக்கும் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இது அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் சோம்பு டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும். ஆகவே எடையை வேகமாக குறைக்க நினைத்தால், சோம்பு டீயைக் குடியுங்கள்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

சோம்பு டீ எப்போதும் வாயைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். ஆகவே வாய் துர்நாற்ற பிரச்சனையால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்திப்பவர்கள், இந்த டீயை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.

சோம்பு டீ தயாரிக்கும் முறை:

சோம்பு டீ தயாரிக்கும் முறை:

ஒரு டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

கருப்பை புற்றுநோய் உள்ளவர்கள் சோம்பு டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fennel Tea Can Do These To Your Health; Check Them

Fennel tea has plenty of health benefits. Know how fennel tea helps in weight loss and indigestion on Tamil Boldsky.
Subscribe Newsletter