Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பைல்ஸ் வருவதற்கு இவைகள் தான் காரணம் என்பது தெரியுமா?
இங்கு பைல்ஸ் வருவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பைல்ஸ் என்பது ஆசன வாயில் உள்ள நரம்புகளில் அழற்சி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் கொடுமையான பிரச்சனையாகும். ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால், ஆசன வாயில் இரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது வலி, இரத்தம் கலந்த மலம், அடிவயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் ஆசன வாயில் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். அதுவே கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிட்டால், ஆசன வாயில் புண் மற்றும் புற்றுநோய் ஏற்படும். இங்கு ஒருவருக்கு பைல்ஸ் எந்த காரணங்களுக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காரணம் #1
மிகவும் கனமான பொருட்களைத் தூக்கும் போது, உடலின் கீழ் பகுதியில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, ஆசன வாயில் உள்ள நரம்புகள் முறிய ஆரம்பித்து, பைல்ஸிற்கு வழிவகுக்கும்.

காரணம் #2
அளவுக்கு அதிகமாக கடுமையான உடற்பயிற்சியை செய்தால், அடிவயிற்றில் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பைல்ஸ் பிரச்சனை ஆரம்பமாகும். குறிப்பாக கால்களுக்கு கடுமையான உடற்பயிற்சியை செய்தால், இந்நிலை ஏற்படும்.

காரணம் #3
மலம் கழிக்க முடியாமல், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து மலம் கழிக்க முயற்சித்தால், ஆசன வாயில் உள்ள நரம்புகள் காயமடைந்து, பைல்ஸை உண்டாக்கும்.

காரணம் #4
எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், மலம் இறுக்கமடைந்து, பைல்ஸை உண்டாக்கிவிடும்.

காரணம் #5
மலச்சிக்கலால் குடலில் மலம் பல நாட்களாக தேங்கி, ஒரு கட்டத்தில் அதை வெளியேற்றும் போது, அதனால் ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸை உண்டாக்கும்.

காரணம் #6
கர்ப்ப காலத்திலும் பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் வயிற்றில் உள்ள குழந்தை மலக்குடலில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகிறது.

காரணம் #7
அன்றாடம் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு, அதனாலேயே சிலருக்கு பைல்ஸ் வரும்.

காரணம் #8
வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ச்சியாக மலம் கழிக்கும் போது ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸ் வரும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications