அதிக டென்சனால் உங்கள் நரம்பு முறியப் போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நிறைய பேர் அன்றாடம் அதிக வேலைப்பளுவால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஒருவர் அளவுக்கு அதிகமாக டென்சன் அல்லது மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது நரம்பு முறிவு ஏற்படும். நோய்களை விட கொடியது தான் மன அழுத்தம்.

மன அழுத்தத்திற்கு ஒருவர் உள்ளானால், அது அவரது மன நிலையை பெரிதும் பாதித்து, ஒரு கட்டத்தில் உயிரையே பறித்துவிடும். இங்கு ஒருவர் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி, நரம்பு முறிவு ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி #1

அறிகுறி #1

அளவுக்கு அதிகமான மனக் கவலை மற்றும் மன இறுக்கத்தை உணர்கிறீர்களா? குறிப்பாக என்ன செய்தாலும், உங்கள் மனம் அமைதியாகவில்லையா? அப்படியெனில் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

அறிகுறி #2

அறிகுறி #2

வாய்விட்டு சப்தமாக அழ வேண்டுமென தோன்றுகிறதா? சிலருக்கு மனம் அதிக பாரத்துடன் இருக்கும் போது, வாய்விட்டு அழத் தோன்றும். இப்படி தோன்றினால், அத்தகையவர்களுக்கு நரம்பு முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.

அறிகுறி #3

அறிகுறி #3

சிலர் தன்னம்பிக்கை, சுயமரியாதை இழந்தவர்களாக மற்றும் குற்ற உணர்வினால் அதிகம் திணறினால், அத்தகையவர்களுக்கும் நரம்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அறிகுறி #4

அறிகுறி #4

இரவில் தூக்கம் வராமலோ அல்லது அளவே இல்லாமல் தூங்கினாலோ, அதுவும் நரம்பு முறிவு ஏற்படப் போவதைக் குறிக்கிறது.

அறிகுறி #5

அறிகுறி #5

மன அழுத்தம் ஒட்டுமொத்த உடலையும் சோர்வடையச் செய்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவில் மிகவும் பலவீனமாக்கிவிடும். இப்படிப்பட்ட உணர்வும் நரம்பு முறிவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

அறிகுறி #6

அறிகுறி #6

காரணமின்றி துணையுடன் உறவில் ஈடுபட நாட்டமில்லாமல் போனால், அதுவும் நீங்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

அறிகுறி #7

அறிகுறி #7

மனதில் கஷ்டம் அல்லது அழுத்தம் அதிகரிக்கும் போது, சிலர் அளவுக்கு அதிகமாகவும், இன்னும் சிலர் சாப்பிடாமலும் இருப்பர். இப்படியெல்லாம் மனதில் தோன்றச் செய்வதற்கு கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் தான் காரணம்.

அறிகுறி #8

அறிகுறி #8

தலைவலியில் இருந்து, வயிற்று வலி வரை அனைத்துமே அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கும். முக்கியமாக மன அழுத்தம் இருந்தால், செரிமான மண்டலமும் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படக்கூடும்.

அறிகுறி #9

அறிகுறி #9

எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல், மூளை கவலை உலகில் சூழ்ந்து, ஒருவித குழப்பத்திலேயே இருந்தால், அதுவும் மன அழுத்தத்தால் நரம்பு முறிவு ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கும்.

அறிகுறி #10

அறிகுறி #10

அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும் போது, சிலர் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்து, மார்பு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டிருப்பது போன்று உணர்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Beware Of Nervous Breakdown Signs! It Could Happen To Anyone Due To Stress!

    Do you know what nervous breakdown is? Overwhelming stress could drive you to a point of total exhaustion. You seem to explode! Well, here are the signs of nervous breakdown.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more