படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா? அப்ப இத குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

வயது அதிகரிக்கும் போது எப்படி உடலினுள் பல மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அதேப் போல் உடலின் ஸ்டாமினாவிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் பாலுணர்ச்சி அல்லது விறைப்புத்தன்மையிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களது அந்தரங்க பகுதியில் வறட்சி ஏற்படும். அதற்காக பாலியல் சக்தி முற்றிலும் போய்விட்டது என்று நினைக்க வேண்டாம்.

ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தால், வாழ்நாள் முழுவதும் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதுவும் அன்றாட உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு வகையை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

சிலருக்கு உணவுகளை மென்று விழுங்குவதை விட, பானங்களாக எடுத்துக் கொள்ள பிடிக்கும். அத்தகையவர்களுக்காக பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய படுக்கையில் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க உதவும் சில பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தால், உடலின் ஸ்டாமினா நிலைத்து பாலியல் வாழ்க்கை சிறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிப்பது சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே பாலுணர்ச்சி நீடித்து படுக்கையில் சிறப்பாக செயல்பட கற்றாழை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கற்றாழை ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

ஆய்வுகளின் படி, மாதுளை ஜூஸ் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கும் சக்தியைக் கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இதனால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். முக்கியமாக மாதுளை ஜூஸ் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

பால்

பால்

முதலிரவு அன்று ஏன் பெண்களிடம் பால் கொடுத்து அனுப்புகிறார்கள் என்று தெரியுமா? ஏனெனில் பால் பாலியல் வாழ்க்கையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கச் செய்து, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

வாழைப்பழ ஷேக்

வாழைப்பழ ஷேக்

வாழைப்பழத்தில் உள்ள புரோமிலைன் என்னும் நொதி, பாலுணர்ச்சியை மேம்படுத்தும். ஆகவே படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், தினமும் வாழைப்பழ மில்க் ஷேக்கை குடியுங்கள்.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி ஒரு நேச்சுரல் வயாகரா. இதற்கு அதில் உள்ள எல்-சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் தான் காரணம். இது உடலினுள் செல்லும் போது எல்-அர்ஜினைனாக மாற்றப்பட்டு, நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தூண்டி, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ஆகவே தர்பூசணி ஜூஸ் குடியுங்கள். இதனால் நீண்ட நேரம் படுக்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.

திராட்சை ஜூஸ்

திராட்சை ஜூஸ்

சிவப்பு திராட்சையில் வளமான அளவில் போரான் என்னும் கனிமச்சத்து உள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டி, பாலியல் வாழ்க்கையை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

அத்திப்பழ மில்க் ஷேக்

அத்திப்பழ மில்க் ஷேக்

அத்திப்பழத்தில் ஜிங்க், மக்னீசியம் போன்ற டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இதர செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், அத்திப்பழ மில்க் ஷேக்கைக் குடியுங்கள்.

அவகேடோ மில்க் ஷேக்

அவகேடோ மில்க் ஷேக்

அவகேடோ பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் போலிக் அமிலம், ஒட்டுமொத்த ஆற்றலையும் அதிகரிக்க உதவும். அதோடு அவகேடோ பழத்தில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. சமீபத்திய ஆய்வில் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

இப்போது பாலுணர்ச்சியை அதிகரிக்கும் வேறு சில உணவுப் பொருட்கள் என்னவென்று காண்போம்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள மக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கச் செய்யும். முக்கியமாக அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.

சால்மன் மீன்

சால்மன் மீன்

சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தாலே, பாலியல் வாழ்க்கை பாழாகாமல் இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக பராமரிக்க உதவி, டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஒருவர் தினமும் 1/2 கப் கொண்டைக்கடலையை வேக வைத்து உட்கொண்டால், ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களுள் 28 சதவீதம் கிடைக்கும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம், உடலினுள் நல்ல மனநிலையை உணரச் செய்யும் கெமிக்கல்கள் வெளியிடப்படும். இதனால் துணையுடன் படுக்கையில் சிறப்பாக உறவில் ஈடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Drinks For Sexual Stamina

Here is a list of drinks that will boost your sexual stamina. Read on to know more...