தினமும் 10 நிமிடம் மஞ்சளை பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவுவதால் ஏற்படும் அற்புதங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது சமையலறையில் உள்ள பொருட்களில் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புத பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சளை அன்றாட உணவில் சேர்ப்பதால், ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதோடு, இது ஓர் அழகு பராமரிப்பு பொருளாகவும் பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

மஞ்சளை உணவில் சேர்ப்பதால் மட்டுமின்றி, அதனை கண்களைச் சுற்றி தடவுவதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த மஞ்சளை பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அந்த மஞ்சள் பேஸ்ட்டை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்றும் காண்போம். இதோடு மஞ்சளின் இதர மகிமைகள் குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் - சிறிது
அன்னாசி ஜூஸ் - சிறிது

செய்முறை:

செய்முறை:

மஞ்சள் தூளை அன்னாசி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மாயமாய் மறைவதோடு, கண்களைச் சுற்றி இரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

இப்போது மஞ்சளை வேறு எப்படி தயாரித்து குடித்தால், உடலின் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 ஸ்பூன்
பொடித்த ஏலக்காய் - 1
பட்டை - 1 சிறிய துண்டு

செய்முறை:

செய்முறை:

முதலில் பாலை சூடேற்றி, அத்துடன் ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், தேங்காய் எண்ணெய், தேன் சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு இறக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி, கண்களின் மேல் மற்றும் கீழ் பகுதியில் தடவி, 5-8 நிமிடம் நன்கு காய வைத்து, பின் கழுவ வேண்டும்.

நன்மைகள்:

நன்மைகள்:

இந்த கலவை தலைவலி, வயிற்றுப்போக்கு, சளி, வயிற்றுப் புழு பிரச்சனை, வைரஸ் தொற்றுகள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக தொற்றுக்களை சரிசெய்யும்.

மேலும் இந்த கலவை அழற்சியால் ஏற்படும் மூட்டு மற்றும் தசை வலிகளைப் போக்கும் சக்தி கொண்டவையாகும். இப்போது மஞ்சளின் இதர நன்மைகளைக் காண்போம்.

புற்றுநோய்

புற்றுநோய்

மஞ்சள் ப்ரீ-ராடிக்கல்களை நடுநிலைப்படுத்தும் திறன் கொண்டவை மற்றும் உடலினுள் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது புற்றுநோயை உருவாக்கத்துடன் தொடர்புடைய நொதிகளைத் தடுக்கவும் செய்யும்.

அல்சைமர் நோய்

அல்சைமர் நோய்

மஞ்சள் மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மேலும் இது மூளையில் அமிலாய்டு உருவாக்கத்தை நீக்கி, அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

மஞ்சள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவும்.

இயற்கை வலி நிவாரணி

இயற்கை வலி நிவாரணி

மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலிகளில் இருந்து விடுவிக்கும் வலி நிவாரணி போன்று செயல்படும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

செரிமானத்தை மேம்படுத்தும்

மஞ்சள் பித்தநீர் உற்பத்தியைத் தூண்ட உதவி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்வற்றைக் குறைக்கும். அதோடு, மஞ்சள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Apply Turmeric Around Your Eyes And See Its Incredible Health Benefits

Read this article to know about the benefits of applying turmeric around the eyes.
Story first published: Thursday, March 9, 2017, 10:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter