For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயது அதிகரிக்கும் போது பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்!

இங்கு பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது அவர்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

வயது அதிகரிக்கும் போது, சருமத்தில் சுருக்கங்களும், முதுமைக் கோடுகளும் வர ஆரம்பிக்கும். இது பொதுவான ஒன்று தான். ஆனால் ஒருவருக்கு வயது அதிகரிக்கும் போது, உடலில் உள்ள செல்களும் சீரழிய ஆரம்பிக்கும் மற்றும் மீளுருவாக்கத் திறன் குறைய ஆரம்பிக்கும்.

7 Unusual Ways In Which Your Breasts Change As You Age!

எப்போது உடலில் உள்ள செல்களின் மீளுருவாக்கத் திறன் குறைய ஆரம்பிக்கிறதோடு, இப்போது உடலின் பல பகுதிகளில் உள்ள திசுக்கள் அழிய ஆரம்பித்து, முதுமை தோற்றம் வெளிப்பட ஆரம்பிக்கும். பொதுவாக முதுமைத் தோற்றம் 25-30 வயதில் ஆரம்பமாகும்.

இப்படி முதுமை ஒருவரை நெருங்கும் போது, ஆண் மற்றும் பெண்களின் உடலினுள்ளும் மாற்றங்கள் ஏற்படும். சரி, இப்போது வயது அதிகரிக்கும் போது பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீக்கம்

வீக்கம்

வயது அதிகமாகும் போது, உடலில் உள்ள ஹார்மோன்களில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இதனால் பூப்படைதல், கர்ப்ப காலம் மற்றும் இறுதி மாதவிடாய் போன்ற ஒவ்வொரு காலங்களிலும் மார்பகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆரம்பிக்கும்.

அழகிய வடிவம்

அழகிய வடிவம்

20-30 வயதுகளில், மார்பகங்கள் நன்கு ஆரோக்கியமாகவும், மிகவும் அழகிய வடிவத்திலும் இருக்கும்.

மார்பக காம்புகளில் மாற்றம்

மார்பக காம்புகளில் மாற்றம்

வயது மற்றும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்களால், பெண்களின் மார்பக காம்புகளின் அளவிலும், வடிவத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.

அரியோலா மாற்றம்

அரியோலா மாற்றம்

ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில், பெண்களின் மார்பகங்களில் உள்ள அரியோலாவின் நிறம் மேலும் அடர் நிறத்தைப் பெறும். இதற்காக அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

மென்மையாகும்

மென்மையாகும்

30 வயதிற்கு மேல், பெண்களின் மார்பகங்களில் உள்ள செல்கள் சீரழிய ஆரம்பித்து, மார்பகங்கள் மிகவும் மென்மையாகி தளர ஆரம்பிக்கும்.

சரும எரிச்சல்

சரும எரிச்சல்

மார்பகங்கள் அதிகமாக தளரும் போது, மார்பக சருமத்தில் அதிகப்படியான அரிப்பை சந்திக்க நேரிடும். இதற்கு மார்பக சருமம் அதன் நெகிழ்வுத்தன்மையை இழந்து, வறட்சி அடைவது தான் காரணம்.

உணர்திறன் குறைதல்

உணர்திறன் குறைதல்

வயது அதிகரிக்கும் போது, மார்பக காம்புகளின் உணர்திறன் குறைய ஆரம்பிக்கும். இதற்கு மார்பக செல்கள் சீரழிவது தான் முக்கிய காரணம். இதனால் தான் வயது அதிகரிக்கும் போது, பெண்களுக்கு பாலியல் நாட்டம் பாதிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Unusual Ways In Which Your Breasts Change As You Age!

Here are some of the unusual and subtle signs in which your breasts change as you age.
Desktop Bottom Promotion