சொன்னா நம்பமாட்டீங்க... புற்றுநோய் வர உண்மையான காரணம் இதுதான்!

Posted By:
Subscribe to Boldsky

முன்பெல்லாம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அத்தகையவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் படி இருந்தது. ஆனால் தற்போது புற்றுநோயானது, சர்க்கரை நோய் போன்று பலருக்கும் வருகிறது. புற்றுநோய் என்பது திடீரென்று வரும் நோயல்ல. பல நாட்களாக நமது உடலில் புற்றுநோய் செல்கள் பெருகிய பின்னரே நமக்கு தெரிய வருகிறது. உலகில் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன.

15 Everyday Things That Increase Your Risk Of Getting Cancer

இவை அனைத்திற்கும் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். நமது மரபணு, பரம்பரை என்று மட்டும் சொல்ல முடியாது. நமது குறிப்பிட்ட சில செயல்கள் அல்லது பழக்கவழக்கங்களும் தான் காரணிகளாக உள்ளன. அதுவும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் சில பொருட்களாலும் புற்றுநோய் அபாயம் உள்ளது.

உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பழக்கங்கள் மற்றும் செயல்கள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இக்கட்டுரையில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

தற்போது மது அருந்துவது ஃபேஷனாகிவிட்டது. ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே சரிசமமாக மது அருந்துகின்றனர். ஒருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், அது உணவுக்குழாய், பெருங்குடல், மலக்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது.

#2

#2

டீசல் வண்டிகளில் இருந்து வெளிவரும் புகையை அதிகமாக சுவாசித்தால், அந்த மாசுக் காற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

#3

#3

பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் அனைத்திலும் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் அடங்கியுள்ளது.

#4

#4

செயற்கை களைக்கொல்லிகளில் உள்ள செயற்கூறு பொருட்கள் மற்றும் சர்பாக்டான்ட்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

#5

#5

வீட்டில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தியில் இருந்து வெளிவரும் புகையில் கார்சினோஜென்களான டோலுன், அல்டிஹைடு, கீடோன்கள் மற்றும் இதர பொருட்கள் புற்றுநோய் செல்களை பெருகச் செய்து, புற்றுநோயை உண்டாக்கும்.

#6

#6

தற்போது பலர் கிரானைட் கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டுகின்றனர். இந்த கற்களால் ரேடான்களின் வெளியீடு அதிகரித்து, புற்றுநோயின் அபாயம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

#7

#7

உங்களுக்கு சோடா பானங்கள் விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் இதை அதிகமாக பருகினால், அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் பித்தப்பை புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டிகளை உண்டாக்கும்.

#8

#8

சூரியக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் சன் ஸ்க்ரீன் க்ரீம்களில் உள்ள ஜிங்க் ஆக்ஸைடு, ப்ரீ ராடிக்கல்களை உற்பத்தி செய்து, டிஎன்ஏவை பாதிப்படையச் செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டும்.

#9

#9

ஏர் பிரஷ்னர்களில் உள்ள குறிப்பிட்ட சில கெமிக்கல்களை நாம் சுவாசிக்கும் போது, அது மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதித்து, புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே கெமிக்கல் கலந்த ஏர் பிரஷ்னர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

#10

#10

டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும். இதற்கு அந்த மெட்டல் டின்களினுள் உள்ள பிளாஸ்டிக் கோட்டின் ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். குறிப்பாக இந்த உணவுகளால் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் தான் அதிகம் உள்ளது.

#11

#11

சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் பைகள் பெர்ப்ளூரோஆக்டோனாயிக் அமிலம் உற்பத்தி செய்து, புரோஸ்டேட் மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும்.

#12

#12

பொதுவாக அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சூடேற்றி உட்கொள்ளும் போது, அவை உடலினுள் செல்லும் போது கார்சினோஜென்களாக மாறி, டிஎன்ஏவை பாதித்து, புற்றுநோய் அபாயத்தை உண்டு பண்ணும். எனவே மீன் போன்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக நெருப்பில் வாட்டாதீர்கள்.

#13

#13

பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அது மார்பக புற்றுநோயை மட்டுமின்றி, கருப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

#14

#14

ஒரு நாளைக்கு 2 முறை பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் ப்ளூரைடு கலந்த டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, அது எலும்பு புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும்.

#15

#15

நீங்கள் டீயை மிகவும் சூடாக குடிப்பவரானால், உடனே அப்பழக்கத்தை கைவிடுங்கள். ஏனெனில் சூடாக குடித்தால், உணவுக்குழாயின் சுவர் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின் அப்பகுதியில் புற்றுநோய் வரும் அபாயமும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Everyday Things That Increase Your Risk Of Getting Cancer

Here are some surprising everyday things that increase your risk of getting cancer. Read on to know more...
Story first published: Thursday, December 21, 2017, 15:03 [IST]