ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடுவது நல்லதுன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி, பாதாம், வால்நட்ஸ் போன்ற அனைத்திலுமே வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. ஸ்நாக்ஸ்களிலேயே நட்ஸ் மிகவும் நல்லது என்று கூட சொல்லலாம்.

What Is The Exact Number Of Nuts That You Should Be Eating Each Day?

இருப்பினும் என்ன தான் சத்துக்கள் மிகுந்த உணவுப் பொருளாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் தீமைகளை தான் சந்திக்க நேரிடும். சரி, இப்போது ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடுவது நல்லது என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மைகள்

நன்மைகள்

தினமும் நட்ஸை சிறிது சாப்பிட்டு வந்தால், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், புற்றுநோய், நரம்பு மண்டல நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை தடுக்கப்படுவதோடு, இனப்பெருக்க மண்டலத்தின் இயக்கமும் சீராக இருக்கும்.

ஆய்வு

ஆய்வு

ஆய்வுகளில் தினமும் 10 கிராம் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், உடலைத் தாக்கும் பல நோய்களின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் தவறாமல் 10 கிராம் நட்ஸ் சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நட்ஸில் 10 கிராம் என்பது எவ்வளவு?

நட்ஸில் 10 கிராம் என்பது எவ்வளவு?

5 வால்நட்ஸ் என்பது 10 கிராம் வால்நட்ஸிற்கு சமம். அதேப் போல் 12 வேர்க்கடலை = 10 கிராம்; 9 பாதாம் = 10 கிராம்; 6 முந்திரி = 10 கிராம் அளவிற்கு சமமாகும்.

இறப்பு விகிதம் குறைவு

இறப்பு விகிதம் குறைவு

மற்றொரு ஆய்வில், தினமும் 10 கிராம் நட்ஸ் சாப்பிட்டு வந்தவர்கள் நோயால் இறக்கும் வாய்ப்பு 23% குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பு

குறிப்பு

ஆகவே உடலில் பல அற்புத மாயங்களை செய்யும் நட்ஸை தவறாமல் உணவில் சேர்த்து, கொடிய நோய்களில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Is The Exact Number Of Nuts That You Should Be Eating Each Day?

Read the article to know the exact number of nuts that you should eat everyday.
Story first published: Monday, December 19, 2016, 16:00 [IST]
Subscribe Newsletter