உடலை சுத்தம் செய்ய தினமும் படுக்கும் முன் இத ஒரு டம்ளர் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலை சுத்தம் செய்ய ஜூஸ் சிறந்த வழியாகும். அதிலும் உடலை சுத்தம் செய்ய காலையில் எழுந்ததும் அதற்கான ஜூஸை குடிக்க வேண்டும் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் இரவில் படுப்பதற்கு முன் ஒருசில ஜூஸ் குடிப்பதனாலும் உடலை சுத்தம் செய்ய முடியும்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!

அதிலும் பச்சை நிற காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஜூஸில் கனிமச்சத்துக்களும், குளோரோஃபில்களும் அதிகம் இருப்பதால், அம்மாதிரியான ஜூஸை இரவில் தூங்கும் முன் குடித்தால், உடல் சுத்தமாவதோடு, புதிய செல்கள் உருவாவதோடு, இரத்தமும் சுத்தமாகும்.

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ!

சரி, இப்போது உடலை சுத்தம் செய்ய இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி

துளசி

துளசி மருத்துவ குணமிக்க ஓர் மூலிகைப் பொருள். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருட்களும் அதிகம் உள்ளதால், இதனை உடலை சுத்தமாகவும், பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ளும். மேலும் துளசியில் மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் நம் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது செல்களை ஈரப்பசையுடனும், உடல் வறட்சியைத் தடுத்தும், கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றவும் செய்யும். அதமட்டுமின்றி வெள்ளரிக்காய் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கவும் செய்யும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது செல்களுக்கு வலிமையை அளித்து, இரத்த செல்களின் அளவை அதிகரித்து, குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் பசலைக்கீரை அனைத்து வகையான புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும். இதில் மாங்கனீசு, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், அயோடின், வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் கரோட்டினாய்டு போன்றவைகளும் உள்ளது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை உடலை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் முதன்மையானது. மேலும் இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். இதில் உள்ள வைட்டமின் சி புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். எலுமிச்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

ஜூஸ் செய்முறை

ஜூஸ் செய்முறை

சிறிது துளசியை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 கப் பசலைக்கீரை, 1 கப் வெள்ளரிக்காய் மற்றும் சிறிது லெட்யூஸ் கீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் பருக வேண்டும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து

இந்த ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை குடிப்பதன் மூலம் உடல் சுத்தமாவதோடு, குடலியக்கம் மேம்பட்டு, கழிவுகள் மிகவும் எளிமையாக வெளியேற்றப்படும். மேலும் இதில் சர்க்கரை எதுவும் சேர்க்கப்படாததால், இது முற்றிலும் ஆரோக்கியமான பானமும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try This Evening Cleansing Juice!

A lots has been said about how to start your day with cleansing juices. But what most of us ignore is that ending the day in a healthy way is as important as starting the day.