Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Egg Vada Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட உங்கள் வீட்டில் உள்ளோர் கேட்கிறார்களா? பொதுவாக மாலை வேளையில் வடை, பஜ்ஜி, பக்கோடா, போண்டா என்று தான் சாப்பிட பிடிக்கும். ஏனெனில் காபி, டீயுடன் மொறுமொறுப்பான வடை அல்லது பஜ்ஜி செய்து சாப்பிட்டால் மிகவும் பிரமாதமாக இருக்கும்.
அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் வடையை செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், முட்டையைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இந்த முட்டை வடை வித்தியாசமான சுவையில், மிகவும் அருமையாக இருக்கும். ஒருமுறை இந்த வடையை செய்து கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு முட்டை வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 4
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 1
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வேக வைத்த 4 முட்டைகளை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துருவிய முட்டையுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்
தூள், கரம் மசாலா, சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள் சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கைகளால்
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பின் அடித்த இந்த முட்டையை பாதி அதில் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் தட்டி
ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து,
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முட்டை வடை தயார்.



Click it and Unblock the Notifications