Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
2 முட்டை இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. செம சூப்பரா இருக்கும்..
Egg Omelette Bajji Recipe In Tamil: குளிர்காலம் என்பதால் மாலை வேளையில் மிகவும் குளிராக இருக்கும். இந்நிலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்கும் வகையிலும், குளிருக்கு இதமாகவும் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமாக செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் 2 முட்டை இருந்தால், அதைக் கொண்டு நன்கு மொறுமொறுவென்றும் ருசியாகவும் பஜ்ஜி செய்து கொடுங்கள். குறிப்பாக வழக்கமாக செய்யும் முட்டை பஜ்ஜி போன்று செய்யாமல், முட்டையை ஆம்லெட் போன்று செய்து, பின் அதைக் கொண்டு பஜ்ஜி செய்து கொடுங்கள். இப்படி செய்யும் போது, அந்த பஜ்ஜி இன்னும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை ஆம்லெட் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ஆம்லெட் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - 2 சிட்டிகை
பஜ்ஜி மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஆம்லெட் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து
ஊற்ற வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு
சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள
முட்டை கலவையை குட்டி குட்டி ஆம்லெட்டுகளாக ஊற்றி, வேக வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பஜ்ஜி மாவிற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, 1/4
கப் அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பெருங்காயத் தூள்,
ஆப்ப சோடா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு முட்டை ஆம்லெட்டையும் எடுத்து,
பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும்
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முட்டை ஆம்லெட் பஜ்ஜி
தயார்.



Click it and Unblock the Notifications