Latest Updates
-
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்!
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்!
IPL 2026: இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி ஆரம்பமாகிவிட்டது. 20 ஓவர்களைக் கொண்ட டி20 தொடரானது மிகவும் பரபரப்பாக இருப்பதோடு, கிரிக்கெட் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாததாகவும் இருக்கும். ஒவ்வொரு சீசனிலும் வீரர்கள் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
அதுவும் ஐபிஎல் சீசனில் வீரர்கள் நிறைய ரன்களை எடுத்தோ, விக்கெட்டுகளை எடுத்தோ சாதனைகளைப் புரிய முனைவார்கள். இருப்பினும், எல்லா சாதனைகளும் நினைவில் கொள்ளத்தக்கவை அல்ல. சில சாதனைகள் நவீன விளையாட்டின் இரு தன்மைகளை வெளிக்காட்டுவதால், அவை வீரர்களைத் தொடர்ந்து அச்சுறுத்துகின்றன.

சில வீரர்கள் வேகமாக ரன்களை குவிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி விளையாடுவார்கள். அப்படி விளையாடும் போது அதிக ரன்களை குவிப்போரும் உள்ளனர், அதே சமயம் டக் அவுட் ஆனோரும் அதிகம் உள்ளனர். இதில் அவர்களின் விளையாட்டு திறன் மட்டுமின்றி, அதிர்ஷ்டமும் முக்கிய பங்கை வகிக்கிறது. இப்போது அப்படி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
1. கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அதுவும் இவர் 19 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அதிக எதிர்பார்ப்புடன் இவரை தேர்ந்தெடுக்கும் அணிகளுக்கு, மிகவும் அரிதாகவே மேக்ஸ்வெல் விளையாடியுள்ளார். இவரது நிலையற்ற ஆட்டமும், இன்னிங்ஸின் தொடக்கத்தில் அவர் அடிக்கடி கண்மூடித்தனமாக அடித்த சிக்ஸர்களும், ரசிகர்களையும் அணி உரிமையாளர்களையும் விரக்தியடையச் செய்தன. அதுவும் கடந்த ஆண்டு மோசமான விளையாட்டை ஆடியதால், இந்த ஆண்டு இவர் ஐபிஎல் போட்டியில் பங்குகொள்ளவில்லை.
2. தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் உள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடைசியாக இவர் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இவர் பல போட்டிகளில் முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அதாவது, இக்கட்டான சூழ்நிலைகளில் இவர் இறக்கப்பட்டதால், பலமுறை டக் அவுட் ஆகியுள்ளார். அதுவும் ஐபிஎல் தொடரில் இதுவரை இவர் 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
3. ரோஹித் சர்மா
மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான ரோஹித் ஷர்மா, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் என்றே கூறலாம். ஆயினும் இவர் பேட்டிங் என்று வரும் போது இதுவரை எப்போதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. இருப்பினும், இவரது சிறப்பான கேப்டன்சி காரணமாக, இன்று வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். எப்போதும் எம்ஐ அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கும் ரோஹித் சர்மா, இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். அதுவும் கடந்த ஆண்டு இவர் 18 ஆவது டக் அவுட்டை பதிவு செய்தார். இந்த ஆண்டும் எம்ஐ அணியில் உள்ளார். இந்த சீசனில் இன்னும் ஒருமுறை டக் அவுட் ஆகிவிட்டால், இந்த பட்டியலில் முதல் இடத்தில் வந்துவிட வாய்ப்புள்ளது.
4. சுனில் நரைன்
மேற்கிந்தியத் தீவு அணியின் ஆல் ரவுண்டரான சுனில் நரைன் ஒரு ஐபிஎல் ஜாம்பவான். இவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். இவரது பந்துவீச்சை சமாளிப்பது என்பது கடினம். ஆயினும், இவர் பந்துவீச்சில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் சிறந்து விளையாடக்கூடியவர். இவர் பவர்ப்ளேயில் இறங்கினால், ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு அடித்து தள்ளும் ஆற்றல் கொண்டவர். இப்படி அதிரடியாக விளையாடுவதால், பலமுறை டக் அவுட் ஆகியுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் சுமார் 17 முறை இவர் டக் அவுட் ஆகியுள்ளார்.
5. ரஷீத் கான்
ஐபிஎல்-ல் உள்ள மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ரஷீத் கானும் ஒருவர். இவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முன்னேறி வருகிறார். அதே வேளையில் இவரது பேட்டிங்கை பற்றி கூறினால், ஆட்டத்தின் கடைசியில் இறங்கி அதிரடியாக விளையாடும் திறனைக் கொண்டவர். இப்படி கடைசியில், அதுவும் இக்கட்டான சூழலில் அதிரடியாக விளையாடுவதால், ஒவ்வொரு முறை பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சிக்கும் போது, பல முறை டக் அவுட் ஆகியுள்ளார். அப்படி இதுவரை 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். என்ன தான் டக் அவுட் ஆனாலும், பௌலிங்கில் இவரை அடித்துக் கொள்ள முடியாது.



Click it and Unblock the Notifications