For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Maha
|

கொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல. கொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. இந்த நிறமி கேரட் மற்றும் தக்காளியில் தான் அதிகம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சிவப்பு கொய்யாவில் தான் அதிகம் உள்ளது.

ஆனால் வெள்ளைக் கொய்யாவில் இந்த கரோட்டீனாய்டு இல்லை. இதனால் தான் அது வெள்ளை நிறத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை இரண்டும் வெவ்வேறு சுவையைக் கொண்டிருக்கும். மேலும் சிவப்பு கொய்யாவில் வெள்ளை கொய்யாவை விட நீர்ச்சத்து, வைட்டமின் சி அதிகம், சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவை குறைவு.

இப்போது சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு சிவப்பு கொய்யா மிகவும் அற்புதமான ஓர் பழம். இந்த கொய்யாவை அடிக்கடி உட்கொண்டு வந்தால், டைப்-2 நீரிழிவு வரும் வாய்ப்பு அபாயம் குறையும். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, சர்க்கரையை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சிவப்பு கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளும்.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

சிவப்பு கொய்யாவில் கண்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வைட்டமின் ஏ உள்ளது. ஆகவே இப்பழத்தை உட்கொண்டால், பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வயிறு

வயிறு

கொய்யாவில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக இப்பழத்தை வயிற்றுப் போக்கின் போது உட்கொள்வது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய்

கொய்யாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனால் புற்றுநோய் வரும் அபாயம் குறையும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி செல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Five Health Benefits Of Pink Guava

Here are some health benefits of pink guava. Read on to know more...
Desktop Bottom Promotion