விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு உள்ள மிகவும் முக்கியமான ஓர் சுரப்பி தான் புரோஸ்டேட் சுரப்பி. இந்த சுரப்பி சிறுநீர்ப்பைக்கும், ஆணுறுப்பிற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த புரோஸ்டேட் சுரப்பியின் முக்கிய பணி, விந்தணுக்களை உற்பத்தி செய்வது தான். உடலுறவில் ஈடுபடும் போது, புரோஸ்டேட் சுரப்பி சுருங்கி சிறுநீர் வடிகுழாய் வழியே விந்தணுக்களை வெளியேற்றும்.

இன்றைய காலத்தில் நிறைய ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி, விறைப்புத்தன்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. அதுமட்டுமின்றி, புரோஸ்டேட் புற்றுநோயும் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இதற்கு காரணம், ஆண்கள் தங்களின் உடல்நலன் மீது அக்கறையின்றி கண்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது மற்றும் பல ஆரோக்கியமற்ற செயல்களில் ஈடுபடுவது தான்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு உணவுகள்

சிவப்பு உணவுகள்

ஆண்கள் சிவப்பு நிற உணவுப் பொருட்களான தக்காளி, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் புரோஸ்டேட் பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு இந்த உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன் உள்ளது. இது உடல் மற்றும் புரோஸ்டேட்டில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.

வேர்க்கடலை, சோயா மற்றும் பருப்பு வகைகள்

வேர்க்கடலை, சோயா மற்றும் பருப்பு வகைகள்

ஆய்வுகளில் ஐசோஃப்ளேவின் புரோஸ்டேட் சுரப்பியைப் பாதுகாப்பதில் சிறந்தது என தெரிய வந்துள்ளது. எனவே இந்த ஆண்கள் ஐசோஃப்ளேவின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுப் பொருட்களான கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், முளைக்கட்டிய பயறுகள், வேர்க்கடலை போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது நல்லது.

மீன்கள்

மீன்கள்

மீன்களில் சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்றவை ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனெனில் இந்த மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

ஆண்கள் தினமும் க்ரீன் டீயை குடிப்பது, உடல் எடையைக் குறைப்பதோடு, புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதற்கு க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இருப்பினும் க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் குடிக்க வேண்டாம்.

பூண்டு

பூண்டு

பூண்டு ஆண்களுக்கு மிகவும் முக்கிய உணவுப் பொருள். ஏனென்றால் இது ஆண் இனப்பெருக்க மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் பூண்டு வேறுபல பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரும். குறிப்பாக ஆண்கள் அதிகம் அவஸ்தைப்படும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை, இதய நோய் போன்றவற்றைத் தடுக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் வாக்கிங், ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்றவற்றை ஆண்கள் மேற்கொள்வது நல்லது. ஏனெனில் இந்த வகை உடற்பயிற்சிகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் நச்சுப்பொருட்களை செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

விலங்குகளின் கொழுப்புக்களைத் தவிர்த்தல்

விலங்குகளின் கொழுப்புக்களைத் தவிர்த்தல்

ஆய்வுகளில் உடலுக்கு கொழுப்புக்கள் இன்றியமையாததாக இருந்தாலும், இது சரியான உணவுகளின் மூலம் கிடைக்கும் நல்ல கொழுப்புக்களே தவிர, இறைச்சிகளிடமிருந்து பெறும் கொழுப்புக்கள் அல்ல. விலங்குகளிடமிருந்து பெறப்படும் கொழுப்புக்களை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், அதனால் புரோஸ்டேட் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே உடலுக்கு நல்ல கொழுப்புக்கள் கிடைக்க வேண்டுமானால், உணவில் ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, மீன்கள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Protect Semen-producing Organ In Men

Here are remedies for prostate cancer and other prostate issues. Eat these foods to protect your prostate gland. Know the tips and foods that prevent prostate cancer.
Story first published: Saturday, January 23, 2016, 10:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter