For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் காலையில் பிரட்டை உணவாக உட்கொள்வதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!

By Maha
|

இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் பெரும்பாலும் காலை வேளையில் பிரட்டை தான் காலை உணவாக சாப்பிடுவார்கள். ஏனெனில் பிரட் நேரத்தை மிச்சப்படுத்தும் என்பதால் தான். ஆனால் இந்த பிரட்டை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். அதிலும் வெள்ளை பிரட்டை உட்கொண்டு வருபவராயின், உடல் நிலை இன்னும் மோசமாக இருக்கும்.

வெள்ளை பிரட் சுவையாக இருக்கலாம். ஆனால் அது சுத்திகரிக்கப்பட்ட மாவினால் அதாவது மைதாவால் தயாரிக்கப்படுவதால், அதில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. அப்படி சத்துக்களே இல்லாத பிரட்டை உட்கொள்ளும் போது, அதனால் உடல்நிலை தான் மோசமாகும்.

இங்கு தினமும் காலையில் வெள்ளை பிரட்டை உணவாக உட்கொள்வதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பருமனடையும்

உடல் பருமனடையும்

தினமும் காலையில் வெள்ளை பிரட்டை சாப்பிட்டு வந்தால், அதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டானது பசியை அதிகரிக்கும். இதனால் அடிக்கடி எதையேனும் உட்கொண்டு, உடல் எடை அதிகமாகும்.

சோம்பல் அதிகமாகும்

சோம்பல் அதிகமாகும்

இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும், அதிகப்படியான சோம்பலை உணர்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் காலையில் உட்கொண்ட பிரட் தான் காரணம். எப்படியெனில், பிரட்டை உட்கொண்ட பின்னர் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.

நீரிழிவு

நீரிழிவு

வெள்ளை பிரட் நீரிழிவு வரும் வாய்ப்பை அதிகரிக்கும். ஏனெனில் வெள்ளை பிரட் இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். இப்படியே தினமும் உட்கொண்டு வந்தால், அதனால் நாளடைவில் நீரிழிவால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் நீரிழிவு இருந்தால் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த அபாயம் அதிகம் உள்ளது.

மலச்சிக்கலை சந்திக்கக்கூடும்

மலச்சிக்கலை சந்திக்கக்கூடும்

சிலருக்கு பிரட் உட்கொண்ட பின் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். ஏனெனில் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து ஏதும் இல்லை. இப்படி நார்ச்சத்து குறைவாக இருப்பதை காலையில் உட்கொண்டால், குடலில் நீர்த்தேக்கம் இல்லாமல் கழிவுகள் இறுக்கமடைந்து வெளியேற முடியாமல் இருக்கும்.

உயர் கொலஸ்ட்ரால்

உயர் கொலஸ்ட்ரால்

நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து இல்லாததால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

ஒருவித எரிச்சலுடன் இருக்கச் செய்யும்

ஒருவித எரிச்சலுடன் இருக்கச் செய்யும்

ஆம், வெள்ளை பிரட்டை தினமும் உட்கொண்டு வந்தால், நீங்கள் மற்றவர்களுடன் எரிந்து விழுவதோடு, அதிக கோபம் அடைவீர்கள். ஏனெனில் தினமும் பிரட்டை உட்கொள்வதால், மூளையில் சுரக்கும் செரடோனின் என்னும் சந்தோஷமான மனநிலையுடன் வைத்துக் கொள்ளும் கெமிக்கல் பாதிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரிக்கும்.

பசி அதிகரிக்கும்

பசி அதிகரிக்கும்

வெள்ளை பிரட்டில் சத்துக்கள் ஏதும் இல்லாததால், அவற்றை உட்கொள்வதன் மூலம் பசி முற்றிலும் அடங்காது. இதன் காரணமாக பகலில் கண்ட உணவுகளை எப்போதும் உட்கொள்ள நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Happen When You Eat White Bread Daily

There are many harmful effects of white bread on health as it is made from refined flour. Maida can prove harmful for you if eaten daily.
Story first published: Wednesday, January 20, 2016, 10:10 [IST]
Desktop Bottom Promotion