உடலுறவின் மூலம் பரவும் மேக வெட்டை நோய்க்கான அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதால் பால்வினை நோய்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் பலருக்கும் தெரிந்தது எய்ட்ஸ் தான்.

உடலுறவின் மூலம் பரவும் கோனோரியா என்று அழைக்கப்படும் மேக வெட்டை நோய் குறித்து தெரியுமா? மேக வெட்டை நோய்க்கான அறிகுறிகள் பெண்களுக்கு மெதுவாக தெரிய ஆரம்பிக்கும்.

ஆனால் அதை பலரும் கண்டுக் கொள்ளமாட்டார்கள். மேக வெட்டை நோயின் தாக்குதலுக்கு உள்ளானால், அதன் முதல் அறிகுறி 10 நாட்களிலேயே தெரிய ஆரம்பிக்கும்.

இப்போது பெண்களுக்கு மேக வெட்டை நோய் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை திரவம் வெளியேறல்

வெள்ளை திரவம் வெளியேறல்

யோனியில் இருந்து வெள்ளை நிறத்தில் திரவம் வெளிவந்தால், அதற்கு கேண்டிடா அல்லது ஈஸ்ட் தொற்று காரணமாக இருப்பது மட்டுமின்றி, மேக வெட்டை நோய்க்கும் இதுவே முதல் அறிகுறி. அதிலும் இந்நோய் இருந்தால், அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வெள்ளை திரவம் வெளிவருவதோடு, அவ்விடத்தில் அரிப்புக்களும் ஏற்படும்.

அடிவயிற்றில் வலி

அடிவயிற்றில் வலி

மேக வெட்டை நோய்க்கான பாக்டீரியா இடுப்பில் இருந்து யோனி வழியாக பயணிப்பதால், கடுமையான அடி வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டால், பலரும் அது உடல் சூட்டினால் தான் ஏற்படுகிறது என்று நினைப்போம். ஆனால் இப்பிரச்சனை பல நாட்களாக இருந்தால், அது மேக வெட்டை நோய்க்கான அறிகுறியாகும்.

இரத்தப்போக்கில் வேறுபாடு

இரத்தப்போக்கில் வேறுபாடு

மேக வெட்டை நோய் இருந்தால், ஒன்று மாதவிடாய் சுழற்சி ஆரம்பமாவதற்கு முன்பே அல்லது மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கில் ஏதேனும் வேறுபாடு இருக்கும்.

உடலுறவுக்கு பின் இரத்தம் வடிதல்

உடலுறவுக்கு பின் இரத்தம் வடிதல்

உடலுறவு கொண்ட பின் இரத்தம் வடிதலும் மேக வெட்டை நோய்க்கான அறிகுறியாகும். எனவே உடலுறவு கொண்ட பின இரத்தக்கசிவு இருந்தால், அதனை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.

சுரப்பிகளில் வீக்கம்

சுரப்பிகளில் வீக்கம்

மேக வெட்டை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், கழுத்தில் உள்ள நிணநீர் முடிச்சுகள் வீக்கமடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் வாய்வழி உறவு கொள்வது தான்.

காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சலும் மேக வெட்டை நோயின் அறிகுறிகளுள் ஒன்று. அதுவும் நீங்கள் அடிக்கடி காய்ச்சல், தசை வலி, களைப்பு மற்றும் தலைவலியை உணர்ந்தால், சாதாரணமாக நினைக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms Of Gonorrhoea Every Woman Should Be Aware Of!

Here are some symptoms of gonorrhoea every woman should be aware of. Read on to know more...
Story first published: Wednesday, February 17, 2016, 17:29 [IST]