For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பெண்டிக்ஸ் பாதிப்பு இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்!

இங்கு உங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்,டயட்,தவிர்க்க வேண்டியவை ஆகியன பட்டியலிடப்பட்டுள்ளன.

By Aashika
|

நம் அடிவயிற்றில் வலது பக்கத்தில் சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்கும் இடத்தில் வால் போன்று இருப்பது தான் குடல்வால். ஆரம்ப காலத்தில் இந்த குடல்வால் பெரியதாக, தாவரங்களில் உள்ள செல்லுலோஸை செரிக்கத் தேவையான நொதியை சுரக்கும் பெரிய பணியைச் செய்து வந்தது.

ஆனால் நாளடைவில் நமது மோசமான உணவுப் பழக்கவழக்கத்தால் இந்த குடல்வால் சுருங்கி சிறியதாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இந்த குடல்வால் உடலில் இருந்து மறைந்து கூட போகலாம். இத்தகைய குடல்வாலினால் எந்த ஒரு பயனும் நமக்கு இல்லாவிட்டாலும், அதில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், நம் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

அப்படி குடல்வாலில் ஏற்படும் அழற்சியைத் தான் அப்பெண்டிக்ஸ் என்று அழைப்பார்கள். இந்த அப்பெண்டிக்ஸ் 5-25 வயதினரைத் தான் அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. சரி, இப்போது அப்பெண்டிக்ஸ் இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிவயிற்று வலி

அடிவயிற்று வலி

அப்பெண்டிக்ஸ் இருந்தால், முதலில் அடிவயிற்றில் வலியை உணரக்கூடும். அதிலும் இந்த வலியானது மிகவும் கடுமையாக, அடிவயிற்றின் வலது பக்கத்தில் இருக்கும். மேலும் இப்பிரச்சனை இருந்தால், அந்த வலி 6-24 மணிநேரத்திற்கு நீடித்திருக்கும்.

அடிவயிற்றில் வீக்கம்

அடிவயிற்றில் வீக்கம்

அடிவயிற்று வலியுடன், உங்கள் அடிவயிறு வீங்கி காணப்படுமாயின், அதுவும் அப்பெண்டிக்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

வாந்தி

வாந்தி

குடல்வாலில் பாக்டீரியாக்களின் தாக்குதல் இருந்தால், அடிவயிற்றின் வலது பக்க வலியுடன், சில நேரங்களில் வாந்தியை எடுக்கக்கூடும். இப்படி நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், அது உங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளதென்பதற்கான அறிகுறியாகும்.

குமட்டல்

குமட்டல்

குமட்டல் பல்வேறு நோய்களுக்கு ஓர் பொதுவான அறிகுறியாக உள்ளதால், பலரும் குமட்டல் உணர்வை சாதாரணமாக நினைத்துவிடுவார்கள். ஆனால் உங்களுக்கு அடிவயிற்று வலியுடன், குமட்டல் உணர்வு ஏற்படுமாயின் சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

பசியின்மை

பசியின்மை

உங்களுக்கு பசி எடுப்பதே இல்லையா? உணவைக் கண்டாலும் சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லையா? அப்படியெனில் அது அப்பெண்டிக்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

குடலியக்க பிரச்சனை

குடலியக்க பிரச்சனை

அப்பெண்டிக்ஸ் இருப்பவர்கள், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுவார்கள். எனவே உங்களுக்கு குடலியக்க பிரச்சனை இருப்பின் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

வயிற்றுப் பிடிப்புகள்

வயிற்றுப் பிடிப்புகள்

வயிற்று வலியுடன், வயிற்றுப்பிடிப்புகள் அடிக்கடி ஏற்படுமாயின், நீங்கள் மருத்துவரை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம். நினைவில் கொள்ளுங்கள், வலி கடுமையாக தாங்க முடியாத அளவில் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் இறப்பை சந்திக்க வேண்டிவரும்.

விளக்கெண்ணய் :

விளக்கெண்ணய் :

இரண்டு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் ரிசினோலிக் அமிலம் இருக்கிறது. சுத்தமான காட்டன் துணியை விளக்கெண்ணெயில் முக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்திடுங்கள் இது அப்பண்டிக்ஸ் தாக்கத்தினை குறைத்திடும்.

அப்பிள் சிடர் வினிகர் :

அப்பிள் சிடர் வினிகர் :

அப்பெண்டிக்ஸ் பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் கடுமையான வயிற்று வலி ஏற்படும். இப்படி அதீத வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் சூடான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடித்திடுங்கள். இது கடுமையான வலி குறைந்திடும்.

மோர் :

மோர் :

அப்பண்டிக்ஸ் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக காரமான உணவுகளை தவிர்த்திட வேண்டும், தினமும் மோர் குடித்திடுங்கள். மோரை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென குடிக்கலாம். கூடுதலாக அவற்றில் இஞ்சி, மல்லிம் புதினா ஆகியவை சேர்த்து குடிக்கலாம்.

நீராகாரங்கள் அதிகமாக குடிக்க வேண்டும் இதனால் உடலின் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்.

பூண்டு :

பூண்டு :

தினமும் பூண்டினை நசுக்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள், இதில் ஆண்ட்டி மைக்ரோபியல் துகள்கள் இருக்கிறது. இதனை எடுத்துக் கொள்வதினால் பாக்டீரியா தொற்றுகளை கட்டுப்படுத்திவிடும்.

பூண்டுச் சாறு மட்டுமல்லாது அப்படியே பூண்டினையும் அப்படியே கடித்துச் சாப்பிடலாம்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீ தயாரித்து குடித்திடுங்கள். அப்பெண்டிக்ஸ் வயிற்று வலியை குறைக்க உதவிடும். இதைத் தவிர இஞ்சி சாறு எடுத்து அதனை அரை டம்பளர் தண்ணீரில் கலந்து குடித்திடுங்கள்.

இது செரிமானத்தினை அதிகப்படுத்திடும். அதோடு வயிற்று வலி கட்டுப்படும்.

பச்சைப் பயிறு :

பச்சைப் பயிறு :

முதல் நாள் இரவே பச்சைப் பயிறை தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். இல்லையென்றால் முளைக்கட்டி பயன்படுத்துங்கள். இவற்றில் அதிகப்படியான நியூட்ரிசியன் இருப்பதினால் அப்பெண்டிக்ஸ் வராமல் தவிர்க்க உதவிடும்.

தண்ணீரில் ஊறவைத்த பச்சைப் பயிறை பயன்படுத்தும் போதும் பச்சைப்பயிறு எல்லாம் அழுகிப் போனாதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்தி கொள்ளுங்கள்.

விட்டமின்ஸ் :

விட்டமின்ஸ் :

உணவுகளில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய உணவினை தவிர்த்திடுங்கள்.

ஜங்க் ஃபுட் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.

 தேன் மற்றும் எலுமிச்சை :

தேன் மற்றும் எலுமிச்சை :

சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிங்கள் வேண்டுமானால் அதில் தேன் சேர்த்துக் குடிக்கலாம். இது குடிப்பதினால் மலச்சிக்கலை தவிர்த்திடும்.

அதிக இனிப்பை இதில் சேர்க்கவேண்டாம்.

புதினா :

புதினா :

சூடான தண்ணீரில் புதினாவை போடுங்கள். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து குடித்திடுங்கள் அதிக நேரம் கொதிக்க வைத்தால் கசப்பு சுவை இறங்கிடும் என்பதால் அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இதனைக் குடிப்பதால் வலி, கேஸ் பிரச்சனை, வாந்தி ஆகியவற்றிலிருந்து தப்பிக்க உதவிடும்.

கோதுமை :

கோதுமை :

உணவில் கோதுமை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது ஆனால் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடாதீர்கள் ஏனென்றால் இது மலச்சிக்கலை ஏற்படுத்திடும்.

சாப்பிட வேண்டியவை :

சாப்பிட வேண்டியவை :

அதிகப்படியான நீராரங்களை குடித்திடுங்கள் . காய்கறி மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடுங்கள். அதிக காரமான,எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்திடுங்கள். அதே போல கொழுப்பு நிறைந்த ,ஃப்ளாடுலென்ஸ் அதிகமிருக்கக்கூடிய பீன்ஸ் மற்றும் ப்ரோக்கோலி உணவுகளை தவிர்த்திடுங்கள், சர்க்கரை, மது ஆகியவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்.

இந்த பாதிப்பு தவிர்க்க :

இந்த பாதிப்பு தவிர்க்க :

இந்த பாதிப்புகளை ஏற்படாமல் தவிர்க்க நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் போதுமான அளவு தண்ணீர் கண்டிப்பாக குடித்திடுங்கள்.

உடல் உழைப்பும் அவசியம். உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் அப்பெண்டிக்ஸ் வர வாய்ப்பு அதிகம் என்பதால் ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms Of Appendicitis You Should Be Aware Of

Here are some symptoms of appendicitis you should be aware of. Read on to know more.
Desktop Bottom Promotion