உங்கள் உடலில் கால்சியம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது என்று தெரியும். அதே சமயம் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து முக்கியமானது என்பது தெரியுமா? அதுமட்டுமின்றி, உடலிலேயே அதிக அளவில் தேவைப்படும் ஓர் சத்தும் கால்சியம் தான்.

உங்களுக்கு பொட்டாசியம் குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

தற்போது நிறைய பேர் இந்த கால்சியம் சத்தின் குறைபாட்டினால் கஷ்டப்படுகிறார்கள். பலருக்கும் கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அதையும் மீறி வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.

வைட்டமின் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் மற்றும் தீர்வளிக்கும் உணவுகள்!

இங்கு ஒருவருக்கு கால்சியம் சத்து குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தசைப் பிடிப்புகள்

தசைப் பிடிப்புகள்

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், அடிக்கடி திடீரென்று சதைகளுக்கு இறுக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து தசைப் பிடிப்புகள் அல்லது வலியை உணரக்கூடும். நீங்கள் இம்மாதிரியான அறிகுறியை பல நாட்களாக சந்தித்து வந்தால், உங்களுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளதென்று அர்த்தம்.

ஞாபக மறதி

ஞாபக மறதி

கால்சியம் குறைபாட்டினால் ஞாபக மறதி ஏற்படும். ஏனெனில் கால்சியம் உடலில் குறைவாக இருக்கும் போது, அதன் எதிர்விளைவாக நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது.

கை, கால்களில் மதமதப்பு

கை, கால்களில் மதமதப்பு

உடலில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் போது, நிறைய பேர் கை மற்றும் கால்கள் மதமதப்புடன் இருப்பது போல் உணர்வார்கள். ஏனெனில் கால்சியம் குறைவாக இருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் அதன் வலிமையை இழந்து, எளிதில் உடையக்கூடியவாறு தளர்ச்சி அடைகிறது.

மன இறுக்கம்

மன இறுக்கம்

கால்சியம் குறைபாடு ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் தான் பாதிக்கும். கால்சியம் குறைபாடு, மன இறுக்கத்துடன் தொடர்புடையது. எனவே உங்களுக்கு சமீப காலமாக மன இறுக்கத்துடன் இருப்பது போல் உணர்ந்தால், அதற்கு கால்சியம் குறைபாடும் ஓர் காரணம்.

மிகுந்த சோர்வு

மிகுந்த சோர்வு

உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லாவிட்டால் மிகுதியான அளவில் உடல் சோர்வை சந்திக்கக்கூடும். மேலும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாதவாறு உணரக்கூடும்.

பலவீனமான மற்றும் உடையக்கூடிய நகங்கள்

பலவீனமான மற்றும் உடையக்கூடிய நகங்கள்

உங்களுக்கு நகம் எளிதில் உடைகிறதா? அப்படியெனில் உங்களுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். நகங்கள் உடைவது மட்டுமின்றி, நகங்களில் தோல் உரிந்தாலும், அது உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லை என்பதற்கான அறிகுறி.

பசியின்மை

பசியின்மை

கால்சியம் குறைபாடு உள்ளவர்க்ள், அடிக்கடி குமட்டலுடன், பசியின்மையையும் சந்திப்பார்கள். உணவு உண்ணாமலேயே வயிறு நிறைந்திருந்தால், அதை சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs That Show You Have Calcium Deficiency

Low level of calcium is the most common cause of weak bones and teeth in people. This occurs when your body extracts the mineral from the bones and other organs, as a result of inadequate level of calcium.
Subscribe Newsletter