For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க அடிக்கடி டர்ர்ர்... புர்ர்ர்... விட காரணம் என்ன தெரியுமா?

By Maha
|

உங்களுக்கு அடிக்கடி வாய்வு வெளியேறுகிறதா? மிகவும் துர்நாற்றத்துடன் உள்ளதா? இவற்றால் உங்கள் மீது உங்களுக்கே எரிச்சல் ஏற்படுகிறதா? முதலில் உங்கள் மீது கோபம் கொள்வதைத் தவிர்த்து, அடிக்கடி வாய்வு வெளியேறுவதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தினமும் டர்ர்ர்ர், புர்ர்ர்ரர் பிரச்சனையா? இதோ சில எளிய டிப்ஸ்!!!

அப்படி காரணத்தைத் தெரிந்து கொண்டு, அச்செயல்களைத் தவிர்த்தால் வாய்வுத் தொல்லை மற்றும் அதனால் வெளிவரும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். இங்கு உடலில் இருந்து அடிக்கடி வாய்வு வெளியேறுவதற்கான காரணங்கள் என்னவென்ற பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவை நன்கு மெல்லாமல் இருப்பது

உணவை நன்கு மெல்லாமல் இருப்பது

தற்போதைய அவசர உலகில் உண்ணும் உணவை பலரும் ரசித்து ருசித்து பொறுமையாக மென்று விழுங்கும் பழக்கமே இல்லை. இப்படி உணவை முறையாக மென்று விழுங்காமல், அப்படியே விழுங்கும் போது உடன் அதிகப்படியான காற்றையும் விழுங்கக்கூடும். இதனால் வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். ஆகவே எப்போதும் உணவை பொறுமையாக நன்கு மென்று விழுங்குங்கள்.

வாய்வு நிறைந்த உணவுகள்

வாய்வு நிறைந்த உணவுகள்

பொதுவாக பருப்பு வகைகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, நொதிக்க வைத்த உணவுகள் போன்றவற்றை உட்கொண்டால், வயிறு உப்புசமடையும். உங்களுக்கு இந்த உணவுகளால் அப்படி ஏற்பட்டால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்.

சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள்

சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள்

சர்க்கரை நிறைந்த உணவுகள் அல்லது பானங்களை அளவுக்கு அதிகமாக பருகும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் உடைக்கப்பட்டு, செரிமானத்தின் போது வாயுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை துர்நாற்றமிக்க வாயுவாக வெளியேறும். ஆகவே இம்மாதிரியான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பவர்களுக்கு வயிறு ஒருவித உப்புசத்துடன் இருக்கும். ஏனெனில் புகைப்பிடிப்பதால் அதிகப்படியான காற்றினை உள்ளிழுக்க நேரிட்டு, அதனால் வயிற்றில் வாய்வு தேங்கி, துர்நாற்றமிக்க வாயுவாக வருகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்தினால், இப்பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

அதிக நார்ச்சத்துள்ள டயட்

அதிக நார்ச்சத்துள்ள டயட்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்பது ஆரோக்கியம் தான். ஆனால் அவை உடலினுள் வாயுவை உற்பத்தி செய்யும். ஏனெனில் நார்ச்சத்துள்ள உணவுகள் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் முழுமையாக செரிமானமாகாமல், வாய்வு உற்பத்தி மட்டும் அதிகம் இருக்கும். எனவே வாய்வுத் தொல்லையை நீங்கள் சந்தித்தால், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுப்பதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.

எரிச்சல் கொண்ட குடல் நோய்

எரிச்சல் கொண்ட குடல் நோய்

வயிறு உப்புசம் என்பது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. இந்நோய் இருக்கும் போது, உண்ணும் உணவுகள் சரியாக குடலின் வழியே வெளியேறாமல் தாமதமாகி, அதன் காரணமாக வயிற்றில் வாய்வு தேக்கத்தை உண்டாக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

குடலில் உள்ள அழுக்கு முறையாக வெளியேற்றப்படாமல் இருந்தால், உடலில் உள்ள கழிவுகள் குடலில் மெதுவாக நகரும் போது, அதன் காரணமாக வாய்வு உற்பத்தி செய்யப்பட்டு, வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். இப்படி தேங்கும் வாய்வு ஒரே நேரத்தில் வெளியேறாமல், அவ்வப்போது துர்நாற்றத்துடன் வெளியேறும். ஆகவே மலச்சிக்கல் இருந்தால், அதனை சரிசெய்யும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Reasons You Keep Farting Every Now And Then!

Here are seven reasons you keep farting every now and then. Read on to know more...
Desktop Bottom Promotion