உங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்க வயிறு பானை போன்று வீங்கிக் கொண்டிருக்கிறதா? அதைக் குறைப்பதற்கு எத்தனையோ டயட்டுகளைப் பின்பற்றியும் பலன் கிடைக்கவில்லையா? ஒரு நாளைக்கு நிறைய கலோரிகளை எரித்தும் தொப்பை குறைந்தபாடில்லையா? அப்படியெனில் நீங்கள் ஏதோ தவறாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Reasons You Are Not Losing Your Belly Fat

இங்கு என்ன செய்தாலும் ஒருவரது தொப்பை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவைகளைத் தெரிந்து கொண்டு, அந்த தவறுகளைத் திருத்திக் கொண்டால், தொப்பை குறைவதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்புக்களை முற்றிலும் தவிர்ப்பது

கொழுப்புக்களை முற்றிலும் தவிர்ப்பது

கொழுப்புக்களைக் கரைக்க வேண்டுமானால், நல்ல கொழுப்புக்களை உட்கொள்ள வேண்டும். இத்தகைய நல்ல கொழுப்புக்கள் வகையைச் சேர்ந்தது தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள். இந்த நல்ல கொழுப்புக்கள் மீன்களில் சால்மன், கானாங்கெளுத்தி போன்றவற்றிலும், பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றிலும் உள்ளது.

உணவைத் தவிர்ப்பது

உணவைத் தவிர்ப்பது

உணவைத் தவிர்த்தால், உடலின் மெட்டபாலிசம் குறையும் மற்றும் கலோரிகள் கரைக்கப்படுவது தடுக்கப்படும். மேலும் ஒரு நாளைக்கு உடலின் செயல்பாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு கலோரிகள் அவசியம். எனவே ஒரு நாளைக்கு 4-5 முறை உணவைப் பிரித்து உட்கொள்ளுங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் சர்க்கரை அதிகம் இருக்கும் மற்றும் இது உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரிக்கும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த நவ தானியங்கள், பீன்ஸ் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்.

அதிகப்படியான மது

அதிகப்படியான மது

அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, கல்லீரல் நச்சுமிக்கதாக மாறி, கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்யும். செரிமான மண்டலத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அதனால் உணவுகளில் உள்ள கலோரிகள் கொழுப்புக்களாக வயிற்றில் தங்கி தொப்பை குறையாமல் தடுக்கும்.

குறைவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

குறைவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

உடலினுள் அளவுக்கு அதிகமாக உட்காயங்கள் இருந்தால், உண்ணும் உணவுகள் வயிற்றைச் சுற்றி தேங்கும். எனவே உடலினுள் இருக்கும் உட்காயங்களைக் குறைக்க சிறந்த வழி ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons You Are Not Losing Your Belly Fat

Here are some reasons you are not losing your belly fat. Read on to know more...
Story first published: Saturday, October 15, 2016, 16:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter