அடிக்கடி மைதாவை சாப்பிடுவதால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொதுவான உணவுப் பொருள் தான் மைதா. பலரும் வாரத்திற்கு ஒருமுறையாவது மைதாவைக் கொண்டு பூரி, சப்பாத்தி, சமோசா என்று சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இருப்பதிலேயே மைதா தான் மிகவும் மோசமான உணவுப் பொருள். இது அனைவருக்குமே தெரியும்.

Reasons Why You Shouldn’t Eat White Flour Or Maida

இருந்தாலும், யாரும் மைதாவை உணவில் சேர்க்காமல் இருப்பதில்லை. மைதாவை எப்போதாவது தான் சாப்பிடுகிறேன் என்று நினைத்து பலர் சாப்பிடுகிறார்கள். ஆனால் மைதாவை எப்போது உணவில் சேர்த்தாலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இங்கு மைதாவை சாப்பிடுவதால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான மண்டலம் பாதிக்கப்படும்

செரிமான மண்டலம் பாதிக்கப்படும்

மைதாவில் நார்ச்சத்து ஏதும் இல்லை. இதனை உட்கொள்ளும் போது, அது எளிதில் செரிமானமாகாமல், செரிமான மண்டலத்தை பாதிப்பதுடன், மெட்டபாலிசத்தில் இடையூறை ஏற்படுத்தி, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.

உடல் பருமன்

உடல் பருமன்

அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளைப் பராமரிக்க அதிகளவு இன்சுலின் தேவைப்படும். இன்சுலின் என்னும் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, கொழுப்புக்களின் தேக்கம் அதிகரித்து உடல் பருமனை அதிகரிக்கக் செய்யும்.

இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும்

இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும்

சுத்திகரிக்கப்பட்ட மைதாவை உணவில் அதிகம் சேர்க்கும் போது, கணையம் அதிக அழுத்தத்திற்குட்பட்டு, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

அசிட்டிக்

அசிட்டிக்

மைதாவை அதிகம் சாப்பிடும், அது அசிடிட்டியை ஏற்படுத்தும். இந்த அசிடிட்டி அப்படியே நீடித்தால், அது வயிற்றில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

நாள்பட்ட நோய்கள்

நாள்பட்ட நோய்கள்

அதிகமான அளவில் மைதாவை உட்கொள்ளும் போது, அது உடலினுள் காயங்களை அதிகரிக்கும். இந்த உட்காயங்கள் அதிகரிக்கும் போது, நாளடைவில் அது வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படக்கூடிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why You Shouldn’t Eat White Flour Or Maida

White flour or maida is a popular food item;but it is also one of the most harmful onesthat we consume. This article discusses 5 bad effects of white flour.
Story first published: Thursday, December 22, 2016, 15:15 [IST]
Subscribe Newsletter