உங்களுக்கு தினமும் ப்ளாக் டீ குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு பால் கலந்த டீயை விட, ப்ளாக் டீ தான் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களை ஆரோக்கியசாலிகள் என்று சொல்லலாம். மற்ற டீயுடன் ஒப்பிடுகையில் இது வேகமாக ஆக்ஸிஜனேற்றப்படுவதால், இது அடர் நிறத்திலும், நல்ல ப்ளேவரையும் கொண்டுள்ளது.

ப்ளாக் டீயில் காப்ஃபைன், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கனிமச்சத்துக்கள், ப்ளூரைடு, மாங்கனீசு மற்றும் பாலிஃபீனால்கள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான டானின், குவானைன், ஜாந்தைன், ப்யூரின், கேட்டசின்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

சோர்வுடன் இருக்கும் போது ஒரு கப் ப்ளாக் டீயைக் குடித்தால், கவனச்சிதறல் தடுக்கப்படுவதுடன், விழிப்புணர்வுடன் இருக்க உதவும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டடுகளால் பல்வேறு நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.

இங்கு ப்ளாக் டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்துக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ப்ளாக் டீயை அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அதுவும் ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பக்கவிளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

ஆராய்ச்சி ஒன்றில், ப்ளாக் டீ பருகினால் இதய பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இவற்றைக் குடித்து வந்தால் கரோனரி ஆர்டரி நோய்கள் இருந்தாலும் அவை குணமாகும்.

புற்றுநோய் தடுக்கப்படும்

புற்றுநோய் தடுக்கப்படும்

ப்ளாக் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கார்சினோஜென்கள் உருவாவதைத் தடுத்து, குடல், கருப்பை, நுரையீரல், சிறுநீர்ப்பை போன்ற இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ப்ளாக் டீ மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய்களையும் தடுக்கும்.

ப்ரீ ராடிக்கல்களை வெளியேற்றும்

ப்ரீ ராடிக்கல்களை வெளியேற்றும்

ப்ரீ ராடிக்கல்கள் தான் இரத்தக்கட்டு, புற்றுநோய், பெருந்தமனி தடிப்பு போன்றவற்றை உண்டாக்குகின்றன. ஆனால் ப்ளாக் டீயை தினமும் குடித்து வந்தால், இந்த ப்ரீ ராடிக்கல்கள் வெளியேற்றப்பட்டு, உடலுக்கு ஒருவித பாதுகாப்பு படலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

ப்ளாக் டீ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். இதற்கு அதில் உள்ள வைரஸ் மற்றும் இதர கிருமிகளை அழிக்க உதவும் டேனின்கள் தான் காரணம். ஆகவே தினமும் ஒரு கப் ப்ளாக் டீ பருகினால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளலாம்.

வாய் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்

வாய் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்

ப்ளாக் டீ குடிப்பதன் மூலம் வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும். ப்ளாக் டீயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, பல் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இதில் உள்ள ப்ளுரைடு வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியம்

மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியம்

ப்ளாக் டீ உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இது உடலுக்கு நல்ல ரிலாக்ஸை வழங்கவும் செய்யும். குறிப்பாக மன அழுத்தத்தில் இருக்கும் போது இதனைப் பருகினால், விரைவில் மன அழுத்தம் குறையும்.

செரிமான பிரச்சனை அகலும்

செரிமான பிரச்சனை அகலும்

ப்ளாக் டீயில் உள்ள டேனின் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக ப்ளாக் டீ பருகி வந்தால், அனைத்து வகையான வயிற்றுப் பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Drink Black Tea Every Day

In this article, we at Boldsky will be listing out some of the reasons to sip on a cup of black tea every day. Read on to know more about it.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter