ஆண்களின் வலது கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறியலாம் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஜோதிடத்தின் படி, கையை வைத்து ஒருவரது எதிர்காலத்தைக் கணிப்பது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே கையை வைத்து ஒருவரின் இனப்பெருக்கத்தைக் கூற முடியும் என்பது தெரியுமா?

ஆம், சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஆணின் விதைப்பையின் அளவை அந்த ஆணின் வலது கையைக் கொண்டு அறிய முடியும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைவிரல் மற்றும் இனப்பெருக்க மண்டலம்

கைவிரல் மற்றும் இனப்பெருக்க மண்டலம்

முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், கைகளின் இரண்டு மற்றும் நான்காம் விரல்களும், ஆண் இனப்பெருக்க மண்டலமும் ஒன்றோடொன்று தொடர்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தது.

தென் கொரிய ஆராய்ச்சி

தென் கொரிய ஆராய்ச்சி

தென் கொரியாவின் இன்ச்சியானில் உள்ள கச்சோன் பல்கலைகழகத்தின் கில் மருத்துவமனை மற்றும் சீயோல் நேசனல் பல்கலைகழக மருத்துவமனையைச் சேர்ந்த சிறுநீரகவியல் துறை ஆராய்ச்சியாளர்கள், இதுக்குறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள்.

வலது கையின் மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்

வலது கையின் மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்

இந்த ஆராய்ச்சியில் 20-69 வயதைச் சேர்ந்த 172 கொரிய ஆண்கள் பங்கு கொண்டனர். முதலில் இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆணின் வலது கையின் 2 மற்றும் 4 ஆம் விரல்களின் நீளம் முதலில் அளந்துக் கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

இந்த ஆய்வின் முடிவில் வலது கையின் மோதிர விரல், ஆள்காட்டி விரலை விட நீளமாக இருக்கும் ஆண்களுக்கு விதைப்பை பெரியதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விந்து உற்பத்தி

விந்து உற்பத்தி

அதேப் போன்று வேறொரு ஆய்வில் ஆண்களின் விதைப்பையின் அளவிற்கும், விந்து உற்பத்திக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men with a long ring finger have bigger testicles, study claims

Researchers in South Korea say finger ratios on the right hand of adult males is an indicator of the size of their testicles. Read on to know more...
Story first published: Wednesday, April 27, 2016, 16:14 [IST]
Subscribe Newsletter