உடல் ஆரோக்கியமாக இருக்க மதிய வேளையில் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய அவசர உலகில் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அனைத்து செயல்களையுமே அவசரமாகத் தான் செய்து வருகிறோம். அதிலும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலைப்பளுவினால், மதியம் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் தவிக்கக்கூடும்.

மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இப்படியே நீடித்தால், உடல்நலம் மோசமாகி பல்வேறு உடல் நல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். எனவே ஒருவர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்தால் தான், அவரது ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக மதிய வேளையில் நிம்மதியான உணவை உட்கொண்டு, ஒருசில செயல்களை பின்பற்றினால், நிச்சயம் நோய்களில் இருந்து விடுபடலாம்.

தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!

சரி, இப்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க மதிய வேளையில் தவறாமல் பின்பற்ற வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல் #1

செயல் #1

என்ன தான் அலுலகத்தில் வேலை அதிகமாக இருந்தாலும், மதிய உணவு இடைவெளியின் போது 15 நிமிடம் வெளியே நடைப்பயிற்சி எடுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியான காற்று மிகவும் அவசியம் மற்றும் கண்களுக்கு கம்ப்யூட்டர் திரையில் இருந்து ஓய்வு என்பது வேண்டும்.

செயல் #2

செயல் #2

வேலை அதிகம் இருக்கிறது என்று வேலை செய்யும் இடத்திலேயே அமர்ந்து உணவு உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இதனால் உங்கள் உடல் தடிப்பதை ஓரளவு கட்டுப்படுத்தலாம். மேலும் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், உணவுகள் செரிமானமாகாமல், அதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

செயல் #3

செயல் #3

முடிந்த வரையில் மதிய சாப்பாட்டினை வீட்டிலிருந்தே கொண்டு வந்து சாப்பிடுங்கள். என்றாவது ஒருநாள் ஹோட்டல் என்றால் பரவாயில்லை. தினமும் ஹோட்டலில் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் தான் மோசமாகும் மற்றும் பல வயிற்று பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

செயல் #4

செயல் #4

ஒருவேளை உங்களால் மதிய வேளைக்கு சமைத்து சாப்பாடு கொண்டு வர முடியாமல் போனால், வீட்டிலேயே பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு சாலட் செய்து கொண்டு வாருங்கள். ஒருவேளை ஒன்றும் கொண்டு வராவிட்டால், வெளியே ஹோட்டலில் கண்டதை சாப்பிடாமல் சப்பாத்தி, சப்ஜி அல்லது கலோரி குறைவான சாண்ட்விச் சாப்பிடுங்கள்.

செயல் #5

செயல் #5

அலுவலகத்தில் மதிய வேளையில் உணவு உட்கொண்ட பின் தூக்கம் வந்தால், அதைக் கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, 5 நிமிடம் குட்டித் தூக்கம் போடுங்கள். இதனால் உங்கள் தூக்கம் நீங்கி, ஒரு செயலில் முழு கவனத்தை செலுத்த முடிவதோடு, உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.

செயல் #6

செயல் #6

மதிய வேளையில் புரோட்டீன் நிறைந்த உணவுகளான தோல் நீக்கப்பட்ட இறைச்சி, கொண்டைக்கடலை, பீன்ஸ், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள். இதனால் வயிறு நிறைவதோடு, நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.

செயல் #7

செயல் #7

அலுவலகத்தில் லிப்ட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாடிப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். இதனால் காலையில் இருந்து அமர்ந்ததில் இருந்து சற்று இடைவெளி கிடைத்து, உடலில் உள்ள கலோரிகளும் சிறிது கரைக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lunch-Time Habits To Follow If You Want To Improve Your Health

Listed below are a few lunch-time tips for better health that you must have a look at!
Subscribe Newsletter