For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளைக்கு எவ்வளவு தயிர் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?

எந்த உணவுப் பொருளை எவ்வளவு உட்கொள்வது நல்லது என்று நீங்கள் கேட்கலாம். இங்கு எந்த உணவை எவ்வளவு சாப்பிடுவது நல்லது என்பது குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

நாம் சாப்பிடும் பல உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கலாம். என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு ஆகும். எனவே எந்த ஒரு உணவையும் உதாரணமாக, ஸ்மூத்திகள் ஆரோக்கியமானது தான். அதற்காக ஒரே நேரத்தில் ஒரு டம்ளருக்கு மேல் குடிக்க கூடாது.

Know The Right Portions Of Your Favourite Healthy Foods

மேலும் எப்போதும் எந்த ஒரு உணவையும் உட்கொள்ளும் முன் அதில் உள்ள கலோரிகளை காண வேண்டும். கலோரிகள் அதிகமானால் உடல் பருமன் அதிகரித்துவிடும். சரி, எந்த உணவுப் பொருளை எவ்வளவு உட்கொள்வது நல்லது என்று நீங்கள் கேட்கலாம்.

இங்கு எந்த உணவை எவ்வளவு சாப்பிடுவது நல்லது என்பது குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு கோதுமை பாஸ்தா

முழு கோதுமை பாஸ்தா

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் நல்லதாக இருக்கலாம். முழு கோதுமை பாஸ்தாவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. அதற்காக ஒரு பெரிய தட்டு முழு கோதுமை பாஸ்தாவை சாப்பிடலாம் என்பதில்லை. ஏனெனில் அதில் 300 கலோரிகள் உள்ளன. வேண்டுமானால் ஒரு சிறிய கப் முழு கோதுமை பாஸ்தாவை சாப்பிடலாம். இதில் 200 கலோரிகள் உள்ளன.

தயிர்

தயிர்

தயிரில் உடலுக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம் போன்றவை அதிகம் இருந்தாலும், இதையும் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சிலருக்கு தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட பிடிக்கும். ஆனால் சர்க்கரை மிகவும் மோசமான உணவுப் பொருள், அதை தயிருடன் சேர்த்து அதிகமாக சாப்பிட்டால், கொடிய விளைவை சந்திக்க நேரிடும். வேண்டுமெனில் ஒரு சிறிய கப் தயிரை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடலாம்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ரெட் ஒயினிலும் ஏராளமான அளவில் நன்மைகள் நிறைந்துள்ளன. அதற்காக தினமும் ஒரு பாட்டின் ரெட் ஒயினைக் குடிக்கலாம் என்பதில்லை. ஒரு சிறிய டம்ளர் ரெட் ஒயினிலேயே 120 கலோரிகள் உள்ளன. அப்படியெனில் ஒரு பாட்டிலில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்று சற்று யோசியுங்கள்.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன் இருப்பதால், இதனை உணவில் சேர்ப்பது நல்லது. ஆனால் சிறிது தான் உட்கொள்ள வேண்டும் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் 200 கலோரிகள் உள்ளன. ஆகவே ஒரு நாளைக்கு 1 டீஸ்பூனுக்கு மேல் எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முட்டைகள்

முட்டைகள்

காலை உணவாக முட்டை சாப்பிடுவது நல்லது. அதுவும் 2 முட்டையை சாப்பிட்டால், 160 கலோரிகளுடன், அதிக அளவு புரோட்டீனும் கிடைக்கும். ஆனால் கலோரிகள் அதிகம் இருப்பதால், ஒரு முட்டையை மட்டும் சாப்பிடுவது நல்லது.

ஸ்மூத்தி

ஸ்மூத்தி

பழங்களால் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தியில் வைட்டமின்கள் அதிகம் இருந்தாலும், சர்க்கரையும் ஏராளமாக இருப்பதால், ஒரு நாளைக்கு மூன்று வேளை குடிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் குடிப்பது தான் நல்லது.

செரில்கள்

செரில்கள்

காலையில் ஒரு பௌல் செரில்களை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய நார்ச்சத்துக்கள் கிடைக்கும். வேண்டுமானால் 2 கப் சாப்பிடலாமே தவிர, அதற்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. மேலும் இந்த செரில்களுடன் பால் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்வதால், வயிறு நிறைந்து, உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know The Right Portions Of Your Favourite Healthy Foods

Here are the recommended portion sizes of your favourite healthy foods. Read on to know more...
Desktop Bottom Promotion