For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

த்ரெட்மில் உங்கள் மூட்டுக்களுக்கு ஆபத்தானதா?

By Ashok CR
|

அறைகளுக்குள் செய்யக்கூடிய முறையான இதயகுழலிய உடற்பயிற்சிகளுக்கு த்ரெட்மில்களே சிறந்த தேர்வு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் உங்கள் மூட்டு ஆரோக்கியத்தை பேணிட, த்ரெட்மில்லை சரியான வழியில் எப்படி பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

த்ரெட்மில்லில் சரியான தோரணையில், அதிக நேரம் ஓடுவதாலும், அதனை அதிக நேரம் பயன்படுத்துவதாலும் உங்கள் மூட்டுக்கள் பாதிக்கப்படலாம். உங்கள் மூட்டுக்களைச் சுற்றி தசைநார்கள் உள்ளது. இவை தான் தசைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும். இவைகள் மிகவும் மென்மையான கட்டமைப்புகள் என்பதால் அவற்றில் ஏற்படும் எந்த ஒரு காயமாக இருந்தாலும் நிலைமையை மிகவும் மோசமாக்கிவிடும்.

த்ரெட்மில்லைப் பயன்படுத்துபவர்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய மூட்டு காயத்தை 'ரன்னர்ஸ் நீ' என அழைப்பார்கள். இது கால்மூட்டுறைக்கு பின்னால் ஏற்படக்கூடிய வலியாகும். குருத்தெலும்பு உராய்வினால் இது ஏற்படக்கூடும். சரி, அப்படியானால் த்ரெட்மில் உங்கள் மூட்டுக்களுக்கு ஆபத்தானதா? த்ரெட்மில் பயன்படுத்துபவர்களுக்கு இது பொதுவாக ஏற்படக்கூடிய சந்தேகமே. வீட்டிற்கு வெளியே ஓடுவதாலும் கூட பல வகையான மூட்டு காயங்கள் ஏற்படலாம். ஆனால் த்ரெட்மில் பயன்படுத்தும் போது அதற்கான வாய்ப்புகள் அதிகம்.

த்ரெட்மில்லை சரியாக பயன்படுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாகும். மேலும், த்ரெட்மில் மீது நடப்பதற்கோ ஓடுவதற்கோ முன்பு, அதை செய்வதற்கு நீங்கள் கட்டுக்கோப்புடன் உள்ளீர்களா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்; குறிப்பாக உங்களுக்கு மூட்டு வலி இருக்கும் போது.

த்ரெட்மில்கள் உங்கள் மூட்டுகளுக்கு ஆபத்தா இல்லையா என்பதற்கு பல்வேறு விடைகள் கிடைக்கும். ஆனால் சரியான முன்னெச்சரிக்கைகளை எடுப்பது உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் மூட்டுக்கள் பாதிப்படையாமல் த்ரெட்மில் பயன்படுத்துவதற்கு சில முன்னெச்சரிக்கைகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழங்கால் ஆதரவைப் பயன்படுத்துங்கள்

முழங்கால் ஆதரவைப் பயன்படுத்துங்கள்

உங்களுக்கு மூட்டு வலி இருந்தால், த்ரெட்மில் பயன்படுத்துவதற்கு முன்பு முழங்கால் ஆதரவைப் பயன்படுத்துவது நல்லது. த்ரெட்மில்லில் நடப்பதற்கோ அல்லது ஓடுவதற்கோ பயன்படுத்துவதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுங்கள். முழங்கால் ஆதரவு உங்கள் முழங்காலை சுற்றியுள்ள தசைகளை இறுக்கும். இதனால் வலியில்லாமல் மூட்டுக்களை அசைக்கலாம்.

நேரத்தின் மீது கவனம்

நேரத்தின் மீது கவனம்

த்ரெட்மில் உங்கள் மூட்டுக்களைப் பாதிக்குமா? அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடாதீர்கள். த்ரெட்மில் மீது அரை மணிநேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஓடினாலோ அல்லது நடந்தாலோ, அது நல்ல பழக்கமல்ல. இது உங்கள் மூட்டுக்களின் மீது கூடுதல் அழுத்தத்தைப் போடும். அதனால் த்ரெட்மில்லில் இருக்கும் டைமரை செட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு சௌகரியமாக இறுக்கும் வேகத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரியான தோரணை

சரியான தோரணை

வெளியில் ஓடுவதற்கும் த்ரெட்மில் மீது ஓடுவதற்கும் முக்கிய வேறுபாடே நாம் பின்பற்றும் நம் உடல் தோரணை தான். த்ரெட்மில் பயன்படுத்தும் போது உங்கள் கைகளை சுதந்திரமாக அசைப்பதற்கும், கால்களை விரித்து நடப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கும். இந்த சமரசத்திற்காக உங்கள் கீழ் உடல் பகுதிகளில் அதிக சிரமத்தை போடுவதால் மூட்டு வலி ஏற்படும். பொதுவாக த்ரெட்மில்லை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்.

கீழ் உடலை வலுப்படுத்துதல்

கீழ் உடலை வலுப்படுத்துதல்

கீழ் உடலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது, உங்கள் மூட்டை வலுப்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பிசியோதெரபிஸ்ட் வல்லுநர் அல்லது உடற்பயிற்சி பயிற்சியாளரிடம் உங்கள் உடல்நலத்திற்கு ஏற்றதை கலந்துரையாடலாம்.

மருத்துவரிடம் சோதித்து கொள்ளுங்கள்

மருத்துவரிடம் சோதித்து கொள்ளுங்கள்

த்ரெட்மில்லில் நடப்பது உங்கள் மூட்டுக்களுக்கு கெட்டதா என்ற கேள்விக்கு, உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் மருத்துவர் பதில் கூறலாம். த்ரெட்மில்லில் உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பாக, குறிப்பாக உங்களுக்கு முழங்கால் வலி இருந்தால், உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மூட்டுக்களில் ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்திருந்தால், மருத்துவரிடம் ஒப்புதல் பெறாமல் எப்போதும் த்ரெட்மில்லைப் பயன்படுத்தாதீர்கள். முடக்கு வாதம் போன்ற சில மருத்துவ நிலைகளுக்கு கூடுதல் கவனம் தேவை.

அதனால், இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், த்ரெட்மில்லில் நடப்பது மூட்டுக்களுக்கு கெட்டதா இல்லையா என்ற கேள்வி இனியும் உங்களுக்கு பிரச்சனையாக இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Threadmill Harmful For The Knees

The question whether treadmill is harmful for the knees or not may give you different answers. But, taking proper precautions can keep you safe. Here, we will discuss about some of the precautions to use a treadmill, without harming your knees.
Desktop Bottom Promotion