3 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கும் உலகின் அதிசய நாடுகள்... இங்க தண்ணீரை விட பெட்ரோல் விலை குறைவாம்...!

பெட்ரோல் விலை என்பது இந்தியர்களுக்கு எப்போதுமே அதிர்ச்சியைக் கொடுக்கும் ஒரு விஷயம்தான். ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் பெட்ரோலின் விலையில் ஏற்படுத்தும் வளர்ச்சி என்பது நம்ப முடியாதது. பெட்ரோல் அதன் விலையின் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் இந்தியாவைப் போலவே பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. சில நாடுகளில் தண்ணீரின் விலையை விட பெட்ரோலின் விலை குறைவாக உள்ளது.

உலகளவில் எண்ணெய் வளங்கள் குறைந்து வருவது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் பெட்ரோல் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளன.

Which Countries Has the Cheapest Petrol in the World

உலகில் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக விற்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது; மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றாலும், இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் சராசரி விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஆனால், எண்ணெய் வளம் மிக்க பல நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 3 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த நாட்டில் பெட்ரோல் விலை மிகவும் மலிவாக உள்ளது?

'Global Petrol Price' தரவுகளின்படி, லிபியா, வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில்தான் உலகிலேயே பெட்ரோல் விலை மிகவும் மலிவாக உள்ளது. இந்த நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் ரூ. 2.15 முதல் ரூ. 3 வரை மட்டுமே உள்ளது.

லிபியா

உலகில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் லிபியா முதலிடம் வகிக்கிறது. இந்த திரவ தங்கம் ஒரு லிட்டருக்கு வெறும் $0.024 (இந்திய ரூபாயில் சுமார் ரூ. 2.15) என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இந்த வட ஆப்பிரிக்க நாடு எண்ணெய் வளம் மிக்கது என்பதால், அதன் குடிமக்களுக்குப் பொருளாதார நிவாரணம் அளிக்கும் நோக்கில், இந்த நாட்டு அரசாங்கம் பெட்ரோலை மிகவும் குறைவான விலையில் வழங்குகிறது.

ஈரான்

உலகில் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் ஈரான் இரண்டாமிடத்தில் உள்ளது. அங்கு தற்போதைய பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு சுமார் $0.029, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.51 ஆகும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான தொடர் மோதல் சூழல் நிலவி வந்தபோதிலும், தனது குடிமக்களுக்கு மலிவு விலையில் எரிபொருளை வழங்குவதற்காக, ஈரான் அரசு பெட்ரோல் மானியக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

வெனிசுலா

கடந்த காலத்தில் உலகின் மலிவான பெட்ரோல் உற்பத்தியாளராக இருந்த வெனிசுலா, தற்போது பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த தென் அமெரிக்க நாட்டில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் $0.035 அல்லது ரூ. 3 ஆக உள்ளது.

லிபியா, ஈரான் மற்றும் வெனிசுலாவைத் தவிர, குவைத் மற்றும் அங்கோலாவும் தங்கள் குடிமக்களுக்கு மலிவான பெட்ரோல் விலையை வழங்குகின்றன. அங்கோலாவில், ஒரு லிட்டர் பெட்ரோல் தோராயமாக $0.33 அல்லது ரூ. 27-க்கு விற்கப்படுகிறது.

இந்த நாடுகளில் ஏன் பெட்ரோல் விலை ஏன் குறைவாக உள்ளது?

மிகப்பெரிய எண்ணெய் வளம்: இந்த நாடுகள் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்த நாடுகள் அதிக அளவு கச்சா எண்ணெயை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது, இது எரிபொருள் இறக்குமதி தேவையைக் குறைக்கிறது.

அரசு மானியங்கள்: இந்த நாடுகளில் மலிவான பெட்ரோலுக்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் வலிமையான ஆதரவாக. அரசாங்கம் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தி, குடிமக்களுக்கு அவற்றை மிகக் குறைவாக வைத்திருக்கிறது.

எண்ணெய் துறையில் அரசின் கட்டுப்பாடு: இந்த நாடுகளில் எண்ணெய் துறை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது தனியார் நிறுவனங்கள் விலையைத் தீர்மானிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, அரசாங்கமே பெட்ரோல் விலைகயை நிர்ணயிக்க அனுமதிக்கிறது.

Story first published: Tuesday, March 31, 2026, 11:38 [IST]
Desktop Bottom Promotion