21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்!

Amla Benefits In Tamil: தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. அதுவும் தற்போது எவ்வளவு தான் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற்றாலும், நாள் முழுவதும் மிகுந்த உடல் சோர்வை பலர் சந்திக்கின்றனர். இன்னும் சிலர் காலையில் எழுந்ததும், மூட்டு வலி, கை கால் வலி போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். இன்னும் சிலரோ எப்போதும் கவலைப்பட்டு கொண்டே இருப்பார்கள்.

Doctor Explains What Happens If You Eat One Amla Everyday For 21 Days

இப்படி சந்திக்கும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு அற்புதமான பழம் மிகச்சிறந்த தீர்வை அளிக்கும் என்பது தெரியுமா? அதுவும் இந்த பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 1 பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் பல அதிசயங்கள் நடப்பதாக டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பழம் வேறொன்றும் இல்லை தாத்ரி என்னும் பெரிய நெல்லிக்காய் தான். இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடாமல், கருப்பு உப்புடன் சேர்த்து எடுக்கும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர் கூறியுள்ளார். இப்போது அந்த நன்மைகள் என்னவென்பதையும், நெல்லிக்காயை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.

1. அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல்

"அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 நெல்லிக்காய் பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனை தானாக குறையும். அதுவும் தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். மேலும் வாய்வு தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குறையும்" என்றும் டாக்டர் கூறினார்.

2. தலைமுடி பிரச்சனை

"தலைமுடி அதிகம் உதிர்தல், முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தினமும் இந்த பழத்தை ஒன்று உட்கொண்ட வந்தால், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் குறையும்" என்றும் டாக்டர் கூறினார்.

3. சரும பிரச்சனை

"பளபளப்பான சருமத்தைப் பெற, பருக்கள் குறைய, கரும்புள்ளிகள் நீங்க இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். அதுமட்டுமின்றி, வயதான பின் முகத்தில் தோன்றும் முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தவுமம், சரும வறட்சியை போக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த நெல்லிக்காயானது உள்ளிருந்து சருமத்திற்கு ஈரப்பதமூட்டும்" என்று டாக்டர் கூறினார்.

4. நோயெதிர்ப்பு சக்தி

"அடிக்கடி சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு பழத்தை உட்கொண்டு வந்தால், இவற்றை உண்டாக்கும் வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். ஒருவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் அதிலிருந்து மீண்டு வரவும் உதவி புரியும்." இப்படிப்பட்ட நெல்லிக்காயை தினமும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் என்று டாக்டர் கூறினார்.

5. சர்க்கரை நோய்

"சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை தினமும் தவறாமல் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. இதனால் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கண் பார்வை பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் போன்றவை தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்" என்று டாக்டர் கூறினார்.

6. பிபி, கொலஸ்ட்ரால், இதய பிரச்சனை

"பிபி, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களும் நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வரும் போது, பிபி, கொலஸ்ட்ரால் குறைவதோடு, அவற்றால் சந்திக்கும் இதய பிரச்சனைகளின் அபாயமும் குறையும்" என்று டாக்டர் கூறினார்.

7. கண் பார்வை

"கம்ப்யூட்டர், லேப்டாப், ஃபோன் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், கண் வறட்சி, கண் சோர்வை போன்றவற்றை சந்திக்கக்கூடும். ஏனெனில் ஓய்வின்றி, கண்களை சிமிட்டாமல் தொடர்ந்து மொபைலை பார்கும் போது, அது கண் வறட்சியை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்" என்று டாக்டர் கூறினார்.

8. வாய், பல், வயிறு

"அடிக்கடி வாய்ப்புண், ஈறுகளில் இரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகைளை கொண்டவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காய் உட்கொண்டால், அவற்றைத் தடுக்கலாம்" என்று டாக்டர் கூறினார்.

9. இரத்த சோகை

"உடலில் இரத்த சோகை இருந்தால், தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம், ஹீமோகுளோன் அளவு குறையாமல் பார்த்து கொள்ளலாம். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் தான், தலைச்சுற்றல், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் தெரியும். எனவே பெண்கள் தினமும் இந்த நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது" என்று டாக்டர் கூறினார்.

10. எடை இழப்பு

உடல் எடை குறையணும், தொப்பை குறையணும் என்று நினைப்பவர்கள் இந்த நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம், உணர்ச்சிவசப்பட்டு உண்ணும் பழக்கம் குறையும். உணர்ச்சிவசப்பட்டு உண்ணும் பழக்கம் என்பது கவலை, கோபம் போன்றவற்றை ஈடுகட்ட சிலர் நிறைய சாப்பிடுவார்கள். அதுவும் மனச்சோர்வு, மனக்கவலையை ஈடுகட்டுவதற்காகவே பலர் நிறைய சாப்பிடுவார்கள். ஆனால் நெல்லிக்காய் இதைக் குறைத்து, உடலுக்கு சுறுசுறுப்பை வழங்கும்.

எப்படி தயாரித்து உட்கொள்ள வேண்டும்?

* ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கருப்பு உப்பு சேர்த்து கலந்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் எவ்வளவு நெல்லிக்காயை சேர்க்க நினைக்கிறீர்களோ, அவ்வளவு நெல்லிக்காயை சேர்க்க வேண்டும்.
* பிறகு சுவைக்கு அதில் ஒரு பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கண்ணாடி ஜாரில் இந்த நீருடன் நெல்லிக்காயை சேர்த்து மூடி, அந்த ஜாரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வர வேண்டும்.
* முக்கியமாக இந்த நெல்லிக்காயை ஒரு நாளைக்கு 1 தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை, 2-3 கூட சாப்பிடலாம் என்று டாக்டர் கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion